அட.. குக் வித் கோமாளி ஆண்ட்ரியன் இந்த தமிழ் படங்கள்ல நடிச்சிருக்காங்களா.. COOKU WITH COMALI 4

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோக்களில் பிரபலமான ஒன்று குக் வித் கோமாளி. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி ஷோ பார்க்கப்படும் நிலையில், இதன் சிறப்பம்சமாக இருப்பதே சீரியஸான விஷயமாக இருக்கும் சமையலை மிகவும் வித்தியாசமாக பொழுதுபோக்கு மற்றும் விறுவிறுப்பு அம்சங்களுடன் காண்பிப்பது தான்.

Advertising
>
Advertising

Also Read | அடடே.. தாஜ்மஹால் முன் காதலர் தினத்தை கொண்டாடிய நம்ம ‘பொன்னியின் செல்வர்’.! trending ஃபோட்டோஸ்..

இந்த நிகழ்ச்சியின் நடுவர்களாக பிரபல செஃப்கள் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் ஆகியோர் மிகவும் அரட்டை அடித்து அனைவரையும் கலாய்த்துக் கொண்டே இருப்பதால் நிகழ்ச்சி இன்னும் சுவாரஸ்யமாகவும் செல்கிறது. இதுவரை 3 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில், அனைத்துமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. தொடர்ந்து, 4 ஆவது குக் வித் கோமாளி சீசனும் தற்போது ஆரம்பமாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஆண்ட்ரியன் நன்றாக தமிழ் பேசுவதை பார்த்து பலரும் அசந்து தான் போயிருக்கிறார்கள்.

Images are subject to © copyright to their respective owners.

ஆண்ட்ரியன் இதற்கு முன் தமிழில் வெளிவந்த சில திரைப்படங்களில் நடித்திருப்பது பலருக்கும் தெரியாது. ஒரு சிலருக்கு ஆண்ட்ரியன் ரஜினி முருகன் திரைப்படத்தில் நடித்தது தெரியும். ஆம், நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ரஜினி முருகன் திரைப்படத்தில் சூரிக்கு ஜோடியாக ஆண்ட்ரியன் நடித்திருப்பார்.

Images are subject to © copyright to their respective owners.

இது தவிர சித்தார்த் நடிப்பில் வெளியான எனக்குள் ஒருவன், அஸ்வின் நடித்திருந்த ஸீரோ போன்ற திரைப்படங்களில் துணை நடிகையாகவும் நடித்துள்ளார் ஆண்ட்ரியன்.

Also Read | பீட்டர் விட்ட ராதிகா.. தட்டுத் தடுமாறிய பாக்யா.. கடைசீல கொடுத்த மாஸ் பதிலடி.! Baakiyalakshmi

Cooku with comali 4 contestent andreanne acted in tamil movies

People looking for online information on Cooku with comali 4 andreanne will find this news story useful.