VIDEO: 'ஐயோ பாத்து..'.. பதறிய சிவாங்கி!.. ரசிகர்களுக்கு FLYING KISS.. இது தானா சேர்ந்த கூட்டம்.. வைரல் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் நிறைவடைந்து இருக்கிறது.

முதல் சீசனை விட இந்த சீசன் பிரபலமாக இருக்கிறது. அத்துடன் இந்த சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களுக்கு பெருமளவில் பிரபலமாகி உள்ளனர்.  குறிப்பாக புகழ், அஷ்வின், சிவாங்கி, பவித்ரா உள்ளிட்டோர் இந்த சீசனின் மூலம் அதிக ரசிகர்களை பெற்றிருக்கின்றனர். இதில் சிவாங்கி செய்யும் சேட்டைகளும் குறும்புத்தனமான செயல்களும் மக்களிடத்தில் அவரை கொண்டு போய் சேர்த்துள்ளது எனலாம்.

இது பற்றிய சிவாங்கி அண்மையில் டிவி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது சின்ன வயதில் தன் குரலை அனைவரும் கலாய்த்ததாகவும்,  பிறகு இப்போது பெரியவர்கள் தன்னை ஆசீர்வாதம் செய்வதாகவும், மக்கள் அனைவரும் தங்கள் வீட்டுப் பிள்ளையாக தன்னை பார்ப்பதாகவும் நெகிழ்ந்து போய் கூறியிருந்தார். விஜய் டிவியின் சூப்பர் சிங்கரில் பாடகியாக அறிமுகமான சிவாங்கி,  குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமானார்.

இதனிடையே நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சிபி சக்ரவர்த்தி இயக்கிவரும் டான் திரைப்படத்திலும் சிவாங்கி நடிக்கிறார். அத்துடன் அண்மையில் கவின், தேஜூ அஸ்வினி நடித்து வெளிவந்த அஸ்கு மாரோ பாடலில் சிவாங்கி பாடி அந்தப் பாடலும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் சிவாங்கி மொபைல் ஷோ ரூம் கடைதிறப்பு விழா ஒன்றில் தம் ரசிகர்களை சந்தித்த போது ரசிகர்களின் ஆரவாரம் மிக்க கூட்டத்தின் நடுவே நின்று எடுத்த வீடியோ ஒன்றை தன்னுடைய பகிர்ந்திருக்கிறார்.

அப்போது சிவாங்கி காரில் ஏறிய பிறகு ரசிகர் ஒருவர் சிவாங்கியின் காருக்கு வெளியே இருந்தபடி தடுமாற, அதை பார்த்து பதறிய சிவாங்கி பார்த்து பார்த்து.. என்று கூறுகிறார். அத்துடன் ரசிகர்களுக்காக Flying Kiss கூட கொடுத்தார் ரசிகர்களின் அன்புக்கு பாத்திரமான சிவாங்கி. இந்த ரசிகர் கூட்டம் சிவாங்கியின் சிறுபிள்ளைத் தனமான எதார்த்தமான இயல்புக்காக, தானாக சேர்ந்த கூட்டம் என்பது சந்தேகமே இல்லை.

ALSO READ: "நிகழ்ச்சி முடிந்தது. சிவாங்கி நீ எப்பவும் கேக்குற அந்த கேள்விக்கு பதில்.." - அஷ்வின் உருக்கம்!

VIDEO: 'ஐயோ பாத்து..'.. பதறிய சிவாங்கி!.. ரசிகர்களுக்கு FLYING KISS.. இது தானா சேர்ந்த கூட்டம்.. வைரல் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Cook With Comali Sivaangi flying kiss fans excited viral video

People looking for online information on CookWithComali2, CWC, Fans, Sivaangi, Trending, VijayTelevision will find this news story useful.