“அப்படி பண்ணிருக்க கூடாது”…. “நான் பண்ண டார்ச்சர்ல அப்பா இப்ப…” CWC ஸ்ருதிகா EMOTIONAL.. VIDEO!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி சீசன் 3 புகழ் ஸ்ருதிகா வெளியிட்டுள்ள வீடியோ இப்போது வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

Also Read | காதிஜா- ராம்போ- கண்மணியின் முக்கோண love story…. latest போஸ்டரோடு வெளியான புது Update !

குக் வித் கோமாளி…

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது.

குக் வித் கோமாளி ஸ்டார்ஸ்…

இப்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. சீசனுக்கு சீசன் போட்டியாளர்கள் மாறினாலும், அதை பற்றி பெரிதும் கவலை கொள்ளாத ரசிகர்கள், கோமாளிகள் என்ட்ரிக்கு தான் உற்சாகம் அடைகின்றனர். இதற்கு காரணம், சமையல் தெரிந்த போட்டியாளர்களுக்கு உதவியாக, எதுவுமே தெரியாமல் ஜோடி போடும் கோமாளிகள் செய்யும் அலப்பறைகள் தான். இந்த மூன்று சீசன்களிலும், கோமாளிகளாக வந்த புகழ், பாலா, மணிமேகலை, சிவாங்கி உள்ளிட்டோரின் லூட்டிகள், ரசிகர்களை பெருமளவு ஈர்த்திருந்தது. முந்தைய இரண்டு சீசன்களின் வெற்றியால், தற்போது 'குக் வித் கோமாளி சீசன் 3' நிகழ்ச்சியும் நடைபெற்று, வார இறுதியில் ஒளிபரப்பாகி வருகிறது.

Emotional ஆன ஸ்ருதிகா…

இந்நிலையில் இந்த சீசனின் போட்டியாளர்களில் ஒருவரான ஸ்ருதிகா, சமீபத்தில் இந்த நிகழ்ச்சியில் தனது தந்தையின் உடல்நிலைப் பற்றி பேசி அழுத்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. அவரின் தந்தை ஆஞ்சியோகிராம் சிகிச்சை எடுக்க உள்ளதாகவும், அவரின் உடல்நிலை சரியில்லை என்றும் கூறி அழ, மற்ற போட்டியாளர்களும் சோகமானார்கள். அதையடுத்து இப்போது அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் “நான் அன்று அப்படி அழுது உங்களை சோகமாக்கி இருக்கக் கூடாது. அதற்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். போட்டியாளர்கள் மற்றும் ஜட்ஜ்கள் அனைவரும் ஆதரித்தனர். அப்பா இப்போது சிகிச்சை முடிந்து குணமாகி வருகிறார். என்னோட அன்புத் தொல்லைகள் தாங்காமல் இப்போது ஆபீஸுக்கு செல்ல ஆரம்பித்து விட்டார் “ என கூறியுள்ளார்.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

“அப்படி பண்ணிருக்க கூடாது”…. “நான் பண்ண டார்ச்சர்ல அப்பா இப்ப…” CWC ஸ்ருதிகா EMOTIONAL.. VIDEO! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Cook with Comali Shrutika emotional video goes viral

People looking for online information on Cook with comali, CWC Shrutika, CWC3, Shrutika emotional video will find this news story useful.