விஜய் டிவியில் ஏராளாமான ரியாலிட்டி ஷோக்கள் இதுவரை ஒளிபரப்பாகி வருகின்றது. அவற்றுள், பல நிகழ்ச்சிகளும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வருகிறது.
அந்த வகையில், மிக முக்கியமான நிகழ்ச்சிகளில் ஒன்று, குக் வித் கோமாளி. இதன் முதல் இரண்டு சீசன்கள், மக்கள் மத்தியில் கலக்கல் ஹிட் அடித்திருந்தது. அதே போல, அனைத்து தமிழ் வீட்டிலும் வார இறுதி வந்தால், குக் வித் கோமாளி தவறாமல் ஓடி விடும்.
இரண்டு சீசன்களின் வெற்றியின் காரணமாக, தற்போது குக் வித் கோமாளி மூன்றாவது சீசனும் ஒளிபரப்பாகி வருகிறது.
நிகழ்ச்சியின் 'ஹைலைட்'
பிரபலங்கள் பலர் போட்டியாளர்களாக உள்ளே வர, அவர்களுடன் கோமாளிகளாக இருக்கும் நபர்கள் கலந்து கொண்டு சமைக்க வேண்டும் என்பது தான் இந்த நிகழ்ச்சியின் விதி. இதற்கு நடுவே, சமையல் தெரியாத கோமாளிகள் அடிக்கும் லூட்டிகளும், அவர்களுடன் போட்டியாளர்கள், நடுவர்களான செஃப் ஆகியோர் செய்யும் ஆரவாரமும் தான் நிகழ்ச்சியின் ஹைலைட்.
இப்படி முழுக்க முழுக்க அதகளம் நிறைந்த இந்த நிகழ்ச்சி, ஏறக்குறைய இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அம்மு அபிராமி, அந்தோணி தாசன், தர்ஷன், கிரேஸ், வித்யுலேகா, மனோபாலா, ரோஷ்னி ஹரிபிரியன், சந்தோஷ், ஸ்ருதிகா, ராகுல் தாத்தா உள்ளிட்டோர் ஆரம்பத்தில் போட்டியாளர்களாக உள்ளே வந்தனர். இதன் பின்னர், வைல்டு கார்ட் என்ட்ரியாக, நடிகர் முத்துக்குமார் மற்றும் சுட்டி அரவிந்த் ஆகியோர் வந்தனர்.
இறுதிக் கட்டத்தை எட்டிய குக் வித் கோமாளி 3
இதனையடுத்து, கடந்த வாரம் நடந்த அரை இறுதியின் முடிவில், அம்மு அபிராமி, ஸ்ருதிகா, வித்யுலேகா மற்றும் தர்ஷன் ஆகியோர் இறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளனர். அடுத்ததாக, வைல்டு கார்டு சுற்று நடைபெறவுள்ள நிலையில், இதில் இருந்து யார் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவார்கள் என்பது பற்றியும், தற்போதே நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஜெயிக்க போறது யாரு??
அதிக அளவில் மக்களை ஈர்த்த ரியாலிட்டி ஷோவான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனின் இறுதி சுற்று, இன்னும் சில வாரங்களில் நடைபெறும் என்பதால், இந்த முறை சாம்பியன் ஆக போவது யார் என்பதை அறிந்து கொள்ளும் ஆவலும் ரசிகர்கள் மத்தியில் உள்ளது. ஆனால், அதே வேளையில், மூன்றாவது சீசன் முடிவடையும் போது, அடுத்த சீசனை எதிர்பார்த்து ஒரு வித ஏக்கமும் அவர்கள் மத்தியில் உருவகலாம்.
முன்னதாக, குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.