VIDEO: "மதிக்காம போனல்ல..".. புகழுக்கு மாடு கூட என்ன பஞ்சாயத்து.. இதுக்கு ஒரு ப்ளாஷ்பேக்கே இருக்கு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி நகைச்சுவை நடிகரும், குக் வித் கோமாளி பிரபலமுமான புகழ் பதிவிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், “மாட்டு பொங்கலுக்கு கூப்டப்ப மதிக்காம போனல்ல..  இப்ப குப்ப மேட்டுல கண்டுக்க ஆளில்லாம திரியுற.. வாழைப்பழம் வாங்கித்தர்றேன் நில்லு..” என அவர் பேசப்பேச கேட்காம போய்க்கொண்டிருக்கும் மாட்டிடம், “ஹேப்பி பர்த்டே சொன்னேன்ல அன்னைக்கு.. விஷ் பண்ணா திரும்பி நன்றி சொல்லு” என்று பைக்கில் விரட்டிக்கொண்டே மாட்டின் பின்னாலேயே சென்று பேசுகிறார்.

மாட்டுப்பொங்கலன்று புகழ் மாட்டுக்கு வாழைப்பழம் கொடுத்து, ஹேப்பி பர்த்டே எல்லாம் சொன்னார். ஆனால் மாடு அவரை கண்டுகொள்ளாமல் அலைக்கழித்தது. அதைத் தொடர்ந்து தற்போது புகழ் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த பலரும்,  ‘என்ன அண்ணா மாடு கூடலாம் பேச ஆரம்பிச்சிட்டீங்க?’ என்றும், ‘இன்னும் நிறைய Fun பண்ணனும் நீங்க’ என்று குறிப்பிட்டுள்ளனர்.

அண்மையில், கைதி படத்தில் புகழ் நடித்திருந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி இருந்தன. இந்நிலையில் அவர் சந்தானம் படம் உட்பட சில படங்களில் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேபோல் குக் வித் கோமாளியிலும் புகழ் செய்யும் சேஷ்டைகளுக்கு பலரும் ரசிகர்களாக உள்ளனர்.

VIDEO: "மதிக்காம போனல்ல..".. புகழுக்கு மாடு கூட என்ன பஞ்சாயத்து.. இதுக்கு ஒரு ப்ளாஷ்பேக்கே இருக்கு! வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Cook With Comali pugazh Trending video மாட்டுடன் பேசும் புகழ்

People looking for online information on Cook with comali, Pugazh will find this news story useful.