சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் குக் வித் கோமாளி புகழ் & சக்தி.. வைரல் வீடியோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி புகழ் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பட்டிதொட்டி எங்கும் ஹிட்டடித்தது. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் அந்த நிகழ்ச்சிக்கு ஏகோபித்த வரவேற்பு இருந்தது.

அதில் நடித்த அஸ்வின்,பவித்ரா, ஷிவாங்கி, புகழ், தர்ஷா, பாலா, பாபா பாஸ்கர், ரித்திகா என அனைவருக்கும் அவர்களுக்கென்ற தனித்த ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

புகழ் மற்றும் ஷிவாங்கி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து பல படங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். குறிப்பாக புகழ் நடிப்பில் வலிமை, சபாபதி, என்ன சொல்லப் போகிறாய், எதற்கும் துணிந்தவன், யானை ஆகிய படங்கள்  இந்த ஆண்டு ரிலீஸ் ஆகின.

முன்னதாக 2016-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா என்கிற நகைச்சுவை நிகழ்ச்சியில் பிரபலமான புகழ், தொடக்கத்தில் பெண் வேடமிட்டு பல நகைச்சுவை கான்செப்ட்களில் நடித்து வந்தார்.

தற்போது ஜூ கீப்பர் என்கிற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வரும் புகழ், தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வருவதுடன், அவ்வப்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று வருகிறார். 

இதனிடையே, புகழ் பென்ஸி என்கிற பெண்ணை 5 வருடங்களாக காதலித்து சில நாட்களுக்கு முன் திருமணம் செய்தார். இந்து முறைப்படியும், பென்ஸியா இஸ்லாம் மதத்தைச் சார்ந்தவர் என்பதால் இஸ்லாமிய முறைப்படியும் புகழ் திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில் புகழ் தற்போது சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு மாலை போட்டு இருமுடி கட்டி யாத்திரை செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. நடிகை ரித்திகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். புகழுடன் சக்தியும் சபரிமலைக்கு கன்னி சாமியாக சென்றுள்ளார் என ரித்திகா பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Cook with Comali Pugazh Sakthi Going to Sabarimala Temple

People looking for online information on Cook with comali, Pugazh, Rithika, Sakthi will find this news story useful.