புகழ், தர்ஷா குப்தா மற்றும் பவித்ரா மூவரும் ரசிகர்களுடன் நேரலையில் உரையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அண்மையில் தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 2வது சீசன் நிறைவடைந்தது. சிம்பு பங்குபெற்ற இந்த சீசனின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சியில் இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக கனி அறிவிக்கப்பட்டார். அத்துடன் இந்த நிகழ்ச்சியின் ரன்னராக ஷகிலா மற்றும் அஷ்வின் அறிவிக்கப்பட்டனர். இந்நிகழ்ச்சியின் புகழுடன் தர்ஷா மற்றும் பவித்ரா காம்போ பிரபலம்.
இந்த 3 க்யூட் பிரபலங்கள் ரசிகர்களுடன் நேரலையில் ஒரே காரில் இருந்தபடி உரையாடும்போது, “Live-லயும் சரி Life-லயும் சரி உன்ன விட்டுட்டு போக மாட்டேன் என பவித்ராவிடம் புகழ் அன்பாக கூற, உடனே பவித்ரா, ‘தர்ஷூ கேட்டுச்சா?’ என சொல்கிறார். அப்போது தர்ஷூ, ‘என்ன?’ என கடுப்பாக பேசுகிறார். புகழ் மாமா இல்லாம நாங்க நடிக்க மாட்டோம்.. மூச்சு கூட நாங்க விடமாட்டோம்னு சொல்லிட்டோம் என பவி சொல்ல, அதனால் ஈசிஆரில் இவர்களுக்காக இரவு தங்கியதாக புகழ் கூறுகிறார்.
அப்போது தர்ஷா குப்தா, ‘எங்களுக்குள்ள என்ன ஒரு அண்டர் ஸ்டாண்டிங் பாத்தீங்களா’ என பவியை குறிப்பிட்டு சொல்ல, புகழோ, ‘இப்படி 2 பேர் கிடைக்குறது ரொம்ப கஷ்டம்!’ என புகழ் கூறுகிறார். பவித்ராவோ, புகழின் ஷர்ட் மட்டும் ஒயிட் அல்ல, புகழ் மாமா ஹார்ட்டும் ஒயிட்டு தான். அப்போது புகழ் செய்த காமெடியை கலாய்த்து தள்ளிய தர்ஷா, ‘உங்களுக்கு ஒரு ஷக்தியா நான் இருக்கேன் புகழ்’ என கூறுகிறார்.
ஷூட்டிங்கிற்கு நடுவில் கிடைத்த கேப்பில் மூவரும் செய்துள்ள இந்த அட்ராசிட்டி இணையத்தில் வைரலாகி வருகிறது.