காமெடியனாக 'COOK WITH COMALI' புகழ்.. ஹீரோயினாக அம்மு அபிராமி நடிக்கும் புதிய படம்.. ஹீரோ யாரு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அம்மு அபிராமி - “குக் வித் கோமாளி” புகழ் நடிக்கும் “பாலமுருகனின் குதூகலம்”

Advertising
>
Advertising

Also Read | சிரஞ்சீவி - நயன்தாரா நடிக்கும் புதிய படம்.. படக்குழுவில் இணைந்த பிரபுதேவா! செம்ம வைரல் போட்டோ

மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் “பாலமுருகனின் குதூகலம்”. முழுக்க முழுக்க காதல் கலந்த நகைச்சுவை திரைப்படமாக உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குனர் உலகநாதன் சந்திரசேகரன் இயக்குகிறார். இவர் பிரபல இயக்குனர் துரை செந்தில்குமார் அவர்களிடம் துணை - இணை இயக்குனராக பணியாற்றியவர்.

மாண்புமிகு தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் உயர்திரு மு.பெ.சுவாமிநாதன் அவர்களின் ஆசியுடன் இப்படத்தின் படப்பிடிப்பு திருப்பூரில் இனிதே துவங்கியது.

புது முகம் பால முருகன் கதாநாயகனாக நடிக்கும் “பாலமுருகனின் குதூகலம்” படத்தில் அம்மு அபிராமி நாயகியாக நடிக்கின்றார். “குக் வித் கோமாளி” புகழ், பிஜார்ன் சுர்ராவ், சன்சீவி கோ சுவாமி, கவிதா பாரதி, TSR, அனிஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்

தயாரிப்பு - மிதுன் ஆதித் புரொடக்‌ஷன்ஸ்
இயக்கம் - உலகநாதன் சந்திரசேகரன்
ஒளிப்பதிவு - மணி பெருமாள்
இசை - பிஜார்ன் சுர்ராவ்
படத்தொகுப்பு - மப்பு பிரகாஷ்
கலை - L.கோபி MFA
சண்டைப்பயிற்சி - Danger மணி
நடனம் - அப்சர்
நிர்வாக தயாரிப்பு  - அம்பிகாபதி.M

திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

காமெடியனாக 'COOK WITH COMALI' புகழ்.. ஹீரோயினாக அம்மு அபிராமி நடிக்கும் புதிய படம்.. ஹீரோ யாரு? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Cook with Comali Pugazh Ammu Abirami Starring New Movie Update

People looking for online information on Ammu Abirami, Cook with comali pugazh, CWC, Pugazh, Pugazh new movie updates will find this news story useful.