VIDEO: 4 வார பெட் ரெஸ்ட்க்கு அப்றம்.. COOK WITH COMALI மணிமேகலையின் VIRAL டான்ஸ்... நெகிழ்ச்சி POST!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனியார் டிவி சேனலின் நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்தவர் மணிமேகலை. தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று அதிரடியாக எண்டர்டெயின் செய்து வந்தார்.

இதனிடையே மணிமேகலைக்கு ஒரு சிறிய விபத்து நடந்துவிட்டதால் அவரால் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போனது. அந்த நேரத்தில் விஜய் டிவி புகழ் மற்றும் ரசிகர்கள் பலரும் மணிமேகலையை மிஸ் பண்ணுவதாக குறிப்பிட்டிருந்தனர்.  மணிமேகலையோ, விரைவில் வந்துவிடுவேன் என்றும், ஒரு சிறிய விபத்தால் உண்டான காயம் என்பதால் ஓய்வெடுப்பதாகவும், அனைவரையும் மிஸ் பண்ணுவேன் என்றாலும் கூட தேவையான அளவுக்கு நிகழ்ச்சிகளில் பெர்ஃபார்மென்ஸ் செய்துவிட்டு வந்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமது கணவருடன் சேர்ந்து வலிமாங்கா வலிப் பாடலுக்கு செம்ம் ஜாலியாக டான்ஸ் போட்டிருக்கிறார்.

இந்த வீடியோவை தமது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள மணிமேகலை, 4 வாரம் பெட் ரெஸ்டில் சுடு தண்ணீர் ஒத்தடத்தை அடுத்து, இப்போது தான் நீண்ட நாட்களுக்கு பின் தான் டிரைவிங் செய்துள்ளதாகவும், தமது கணவர் ஹூசைன் தன்னை ஆடவைத்துள்ளதாகவும் தனக்கு கிடைத்த மிகப்பெரும் ஆசீர்வாதம் ஹூசைன் என்று உருக்கமாகவும் நெகிழ்ச்சியாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ: 'படிப்பை தவறவிட்டேன்.. லாஸ்ட் பெஞ்ச் இல்லனா ஃபர்ஸ்ட் பெஞ்ச் இல்ல!' - சீரியலில் ஆரி உருக்கம்!

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Cook With Comali Manimegalai Viral dance video மணிமேகலை

People looking for online information on CookWithComali, Manimegalai, Trending, Viral will find this news story useful.