குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருபவர் இயக்குநர் அகத்தியனின் மகள் கனி.
நடிகை விஜயலட்சுமி மற்றும் நடிகை நிரஞ்சனி ஆகியோரின் சகோதரியான கனியது கணவர் தான் தீராத விளையாட்டு பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் திரு.
அண்மையில்தான் நிரஞ்சனி அகத்தியன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குநர் தேசிங் பெரியசாமியை திருமணம் செய்து கொண்டார். அந்தத் திருமணத்தில் கலந்து கொண்ட கனி மற்றும் அவரது கணவர் திருவின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது
இந்த நிலையில் இயக்குநர் திரு, குக் வித் கோமாளியில் கனி பங்குபெற்ற டிவி நிகழ்ச்சி வீடியோவை பகிர்ந்து “உன்னை நினைத்தால் பெருமையா இருக்கு. எப்படி அவங்களுக்கெல்லாம் நீ சமைச்சு தர்றியோ அப்படி ஒருநாளாச்சும் எனக்கு சமைச்சு தரலாமே?” என்று கேட்க, இதற்கு கனி “அடப்பாவி பாவா புருஷா!” என்று க்யூட்டாக ரிப்ளை செய்துள்ளார்.
ALSO READ: 'சிங்கிள் டேக்ல ஆடுவோம்ல!'.. சுட்டிக் குழந்தைகளின் 'வாத்தி கம்மிங்'.. தரமான சம்பவம்!