குக் வித் கோமாளி அஸ்வின் - புகழ் இணையும் புதிய படத்தின் டிரெண்டாகும் ROMANTIC டீசர் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் நடிகர்கள் அஸ்வின் குமார் மற்றும் புகழ். இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் படத்திற்கு “என்ன சொல்ல போகிறாய்” என்று பெயரிடப்பட்டது.

Advertising
>
Advertising

இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 19ல் சென்னையில் கோலாகலமாக தொடங்கியது. இந்த படம் முழுவதும் அஸ்வினுடன் காமெடி கேரக்டராக நடிகர் புகழ் நடிக்கிறார். நிஜ வாழ்க்கையிலும் அஸ்வினின் நெருங்கிய நண்பரான புகழ், இந்த திரைப்படத்தில் நடிப்பது இவர்களின் காம்போ மீதான எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறது.

இந்த திரைப்படத்துக்கு விவேக்-மெர்வின் இசை அமைக்கின்றனர். டிரைடண்ட் ஆர்ட் ரவீந்திரன் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் ஹரிஹரன் இயக்குகிறார். இந்த படத்தின் டீசர் இன்று (10.11.2021) வெளியாகி உள்ளது. ஒரே கட்டமாக படப்பிடிப்பை படக்குழு முடித்துள்ளது, இந்த திரைப்படம் அஸ்வின் குமாரின் அறிமுக திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னையின் நகர்ப்புற பகுதியில் நடைபெறும் காதல் காமெடி கதையாக "என்ன சொல்லப் போகிறாய்" திரைப்படம் உருவாகிறது. இந்த படத்திற்கு ஒளிப்பதிவை ரிச்சர்ட் எம் நாதன் கையாள்கிறார்.  இந்த படத்தில் தேஜு அஸ்வினி மற்றும் அவந்திகா கதாநாயகிகளாக நடிக்கின்றனர். குணசித்திர கதாபாத்திரத்தில் டெல்லி கணேஷ், சுப்பு பஞ்சு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

 

குக் வித் கோமாளி அஸ்வின் - புகழ் இணையும் புதிய படத்தின் டிரெண்டாகும் ROMANTIC டீசர் வீடியோ! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Cook with Comali Ashwin Pugazh Enna Solla Pogirai teaser

People looking for online information on Ashwin, Cook with comali, Pugazh will find this news story useful.