Cook With Comali Season 3: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த மிகப் பிரபலமான ரியாலிட்டி ஷோ பிக்பாஸ் என்று சொன்னால் பிக்பாஸ் அடுத்ததாக இன்னொரு ஷோ அனைவரையும் கவர்ந்தது.
வித்தியாசமான பொழுது போக்கு சமையல் நிகழ்ச்சி
சொல்லப்போனால் இல்லத்தரசிகள் உட்பட வீட்டிலிருக்கும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த ஒரு இன்னொரு முக்கியமான ஷோ குக் வித் கோமாளி. இந்த ரியாலிட்டி ஷோ, இதுவரை விஜய் டிவியில் 2 சீசன்களாக ஒளிபரப்பாகி வந்தது.
சமையல் போட்டியை மிகவும் வித்தியாசமாகவும் பொழுதுபோக்கு அம்சங்களுடன் காண்பிக்கும் இந்த ஷோவுக்கு பல ரசிகர்கள் உருவாகினர். முதலாவது சீசனில் பல செலிபிரிட்டிகள் சமைப்பதற்காக போட்டியாளர்களாக இந்த ஷோவில் களமிறக்கப்பட்டனர்.
குக் வித் கோமாளி சீசன் 3
இந்நிகழ்ச்சியின் முதல் சீசனில் வனிதா வெற்றி பெற்றார். 2வது சீசனில் கனி வெற்றி பெற்றார். இதேபோல் 3வது சீசன் எப்போது வரும் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அப்போதுதான் புதிய போட்டியாளர்களுடன் குக் வித் கோமாளி சீசனின் 3வது சீசன் விஜய் டிவியில் ஒளிபரப்பாகவுள்ள அறிவிப்பு ப்ரோமோக்களுடன் வெளியானது.
குக் வித் கோமாளி பிரபலங்கள்
முன்னதாக இரண்டாவது சீசனில் அஸ்வின், புகழ், பவித்ரா, சிவாங்கி மற்றும் பலர் பிரபலமடைந்தனர். கோமாளிகளாக மணிமேகலை, சுனிதா, பாலா உள்ளிட்ட பலர் கவர்ந்தனர். இந்த நிகழ்ச்சிக்கு பிரபல செப் தாமோதரன் மற்றும் வெங்கட் பாத் இருவரும் நடுவர்களாக உள்ளனர். இதேபோல் இந்த நிகழ்ச்சியை பிரபல விஜேவும் நடிகருமான ரக்ஷன் தொகுத்து வழங்குகிறார். மதுரை முத்து, அறந்தாங்கி நிஷா உள்ளிட்ட விஜய் டிவியின் பிரபலங்கள் அவ்வப்போது வருகை தருவதை காணமுடியும்.
இந்த நிலையில்தான் இந்த நிகழ்ச்சியின் 3வது சீசனில் ஆகியோர் சமையல் செய்பவர்களாக கலந்துகொள்வதாக ப்ரோமோக்களில் இருந்து காண முடிந்தது. இதேபோல், ஆகியோர் கோமாளிகளாக களமிறங்கியுள்ளதை பார்க்கமுடிகிறது.
யார் இந்த புதிய கோமாளி
இந்த லிஸ்டில் ஒரு புதிய கோமாளியை காண முடிகிறது. அவர்தான் ஷீதா கிளாரின். பெங்களூருவை சேர்ந்த இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இவர் தங்கையுடன் சேர்ந்து செய்யும் அட்ராசிட்டி வீடியோக்கள் மிகவும் பிரபலம். பார்க்கும்போது ரசிக்கும் படியாக இருக்கும் இவர்களின் இந்த வீடியோக்களுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.
கோமாளியின் கடமை
இவர் தற்போது கோமாளியாக இந்த சீசனில் பங்கேற்றிருக்கிறார். இந்த நிகழ்ச்சியை பொழுதுபோக்காக நகர்த்திச் செல்வதும், அதே சமயத்தில் சமைப்பவருக்கு உதவி செய்ய வேண்டியதும், இந்த கோமாளிகளின் கடமையாக இருக்கும். இந்த நிலையில் இந்த சீசன் எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்து ஆர்வம் ரசிகர்களிடையே இப்போதே தொற்றிக் கொள்ள ஆரம்பித்து விட்டது.
Also Read: ‘கடைசி வரை அண்ணி கையால சாப்பாடு கிடையாது’.. பாரதி போட்ட பலே கண்டிஷன்!