CWC-ல நிஜமாவே அடிக்குறாங்களா?.. இத ஒரு SHOW-ஆ பாருங்க.. ACTUAL-ஆ ஷூட்ல இதான் நடக்கும்!.. வித்யூலேகா POST!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Cook With Comali : சமையலுடன் பொழுது போக்கு அம்சத்தையும் முதன்மையாகக் கொண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி சீசன் 3.

Advertising
>
Advertising

Cook With Comali Season 3

ஏற்கனவே 2 சீசன்கள் முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் 3வது சீசனில் பாலா, குரேஷி, சிவாங்கி, மணிமேகலை, சுனிதா, மூக்குத்தி முருகன், ஷீத்தா கிளாரின், பரத் மற்றும் சக்தி ஆகியோர் கோமாளிகளாக பங்கேற்றுள்ளனர். இதேபோல் சமைக்கும் போட்டியாளர்களாக மனோபாலா, ரோஷினி ஹரிபிரியன், ராகுல் தாத்தா, வித்யூலேகா, தர்ஷன், கிரேஸ் கருணாஸ், ஷ்ருதிகா, ஆண்டனி தாசன், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

நடிகை வித்யூலேகா

இவர்களுள், இத்தாலியன் ரெசிபிகளில் ஆர்வமுடைய வித்யூலேகா கடந்த வாரங்களில் இந்திய உணவுமுறைக்கு தகுந்தாற்போலான இத்தாலியன் ரெசிபியை சமைத்து அசத்தினார். அந்த ரெசிபியின் பெயர் கூட பரீச்சயமான பெயராக இல்லையென்றாலும், சாப்பிட்டு பார்த்துவிட்டு வெங்கடேஷ் பட் மற்றும் செஃப் தாமோதரன் இருவரும் அருமையாக இருப்பதாக குறிப்பிட்டனர்.

இத்தாலியன் ரெசிபி

வித்யூலேகாவும், தனக்கு சமைப்பதில் அலாதி ஆர்வம் என்றும் அதிலும் இந்திய முறையில் பல்வேறு உணவுகளை சமைக்கவும் சாப்பிடவும் பிடிக்கும் என்றும் கூறினார். மேலும் குறிப்பிட்ட அந்த ரெசிபியை, தான் முழுமையான இத்தாலியன் முறையில் செய்யாமல், இந்திய முறையில் தயாரிக்க வேண்டும் என்கிற எண்ணத்துடனேயே இருக்கும் பொருட்களை செய்ததாகவும் கூறியிருந்தார்.

நடுவர்கள் வாழ்த்து

குறிப்பாக, அது இத்தாலியன் முறையில் முழுக்க முழுக்க உருவாகாமல் இந்திய உணவுமுறைக்கு தகுந்தாற்போல் சமைக்கப்பட்டிருந்ததால், ஒரு இந்திய - இத்தாலியன் உணவகத்தில் சாப்பிட்ட ஒரு உணர்வையும் நிறைவையும் அந்த உணவு தந்ததாக வெங்கடேஷ் பட் குறிப்பிட்டு வித்யூலேகாவை வாழ்த்தினார்.

வெங்கடேஷ் பட் விளக்கம்

இதனிடையே குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளிகளுடன் கலகலப்பாக அடிப்பது குறித்த சர்ச்சைகள் எழுவதற்கு முன்பே அவை குறித்து பேசிய வெங்கடேஷ் பட், பொழுதுபோக்கிற்காக விளையாட்டாக கோமாளிகளுடன் செட்டில் அடித்து விளையாடுவது உள்ளிட்ட விஷயங்கள் நடந்ததாகவும், அவை யாரையும் காயப்படுத்த அல்ல என்பதுடன் உண்மையாக அடிப்பதுவும் இல்லை என்று விளக்கம் அளித்திருந்தார்.

அது சவுண்ட் எஃபெக்ட் தான்

இந்நிலையில் இதுகுறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள நடிகை வித்யூலேகா, “ப்ளீஸ் எல்லாரும் குக் வித் கோமாளியை ஒரு நிகழ்ச்சியாக மட்டுமே பாருங்க.. அங்க அடிக்கலாம் மாட்டாங்க. அது எல்லாமே சிரிக்க வைப்பதற்கான ஒரு சவுண்ட் எஃபெக்ட் தான், ஷூட்டிங்கில் மிகவும் கலகலப்பாக இருப்போம்.” என்று கூறியுள்ளார்.

மேலும், “சமைப்பவர்கள் கவனமாக சமைக்கும் அதே நேரம் கலகலப்புடனும் இருக்க வேண்டும். நான் 100% நானாக இருக்கிறேன். என்னுடன் சமைக்கும் குக் மற்றும் கோமாளிகள் அனைவருமே பிரியமான மற்றும் என் மரியாதைக்குரியவர்கள்.” என்று குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.

Also Read: “தீ தீ தளபதி”.. 1st Time பரத்வாஜ் இசையில்.. வேற லெவல் ஆல்பம்.. கனடா விஜய் மக்கள் இயக்கம் வெறித்தனம்!

தொடர்புடைய இணைப்புகள்

Cook with comali 3 fun show no actual hitting Vidyullekha post

People looking for online information on Cook with comali 3, Cook With Comali Season 3, Vidyullekha Raman, Vijay tv will find this news story useful.