"விஷ பாட்டில்".. "ஜால்ரா".. "சகுனி".. இப்படிலாம் விருதா? சூடுபிடிக்கும் #BIGGBOSSTAMIL5!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் நாமினேஷனுக்கு பதிலாக, விருதுகளாகவே கொடுத்து ஒரு குட்டி அவார்டு புரோகிராம் பிக்பாஸ் வீட்டுக்குள் அரங்கேறியது.

controversy awards to akshara varun and priyanka BiggBossTamil5
Advertising
>
Advertising

இதில் செட் ப்ராப்பர்ட்டி எனும் விருதை ஐக்கியும், அழு மூஞ்சி எனும் விருதை மதுமிதாவும், ஜவ்வு மிட்டாய், தொட்டால் சிணுங்கி ஆகிய விருதை இசைவாணியும்,
சகுனி, போலி ஆகிய விருதுகளை வருணும் அள்ளினர்.

controversy awards to akshara varun and priyanka BiggBossTamil5

மேலும் டம்மி பீஸ், என்ன நடந்தாலும் மிக்சர் சாப்பிடுபவர், புடுங்குறது பூரா தேவையில்லாத ஆணிதான் ஆகிய அங்கீகாரங்களை ராஜூவும், குரூப்புல டூப்பு எனும் விருதை பாவனியும், வெத்துவேட்டு எனும் விருதை அண்ணாச்சியும், சிம்ப்லி வேஸ்ட் எனும் விருதை நிரூப்பும் பெற்றனர்.

controversy awards to akshara varun and priyanka BiggBossTamil5

இதில் ஜால்ரா எனும் விருதை பிரியங்காவுக்கு ஐக்கிய வழங்கினார். ஆனால் அதை ஏற்ற பிரியங்கா, யார் என்ன சொன்னாலும் தான் சுயமாகவே சிந்தித்து பேசுவதாகவும் கூறினார். இதேபோல்  விஷ பாட்டில் எனும் விருதை பாவனி, அக்‌ஷராவுக்கு வழங்கினார். ஆனால் அந்த விருதை ராஜூவுக்கு வழங்கியிருக்கலாம் என தாமதமாக பாவனி ஃபீல் பண்ணினார்.

இதேபோல், நிரூப் பேசும்போது, சகுனி எனும் விருதினை வருண் மற்றும் அக்‌ஷரா இருவருக்குமே கொடுக்கலாம், அதேசமயம் இரண்டும் சேர்ந்து வருணே செயல்படுவதால், சகுணி எனும் டைட்டிலை வருணுக்கு கொடுப்பதாக குறிப்பிட்டு அதிரவைத்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

Controversy awards to akshara varun and priyanka BiggBossTamil5

People looking for online information on Akshara, Varun priyanka BiggBossTamil5 will find this news story useful.