"அடக்கம் வேணும் - சுரேஷ் தாத்தா" - பதிலடி கொடுத்த வனிதா - சூடு பிடித்தது பிக்பாஸ் வீடு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் தினம் தினம் தீபாவளி தான் எனக் கூறிக்கொள்ளும் அளவிற்கு அனல் பறக்கிறது. பட்டாசும் பலப்பக்கம் இருந்து படபடவென வெடிக்கிறது.

Advertising
>
Advertising

போடு சக்க.. குக் வித் கோமாளி 3-ல் புகழ்!.. கெத்து எண்ட்ரி.. ஆனா வந்தவுடனே வாங்கிய உதை.. தெறி ப்ரோமோ

இந்த முறை போட்டியாளர்கள் அனைவரும் பட்டாசை விட  வெடிப்பதில் கெட்டிக்காரர்கள் என்பது பிக்பாஸ் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் அறிந்ததே ஆகும். அதில், பல முக்கிய புள்ளிகள் இடம்பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக சண்டைக்கும் சரி, சமையலுக்கும் சரி ப்ரோமோ குயின் எனக் கூறும் அளவிற்கு சமையல் ராணி வனிதா எல்லா ப்ரோமோவிலும் தனக்கென இடம் பிடிக்கிறார். 

அந்த வரிசையில் இன்று வெளியான ப்ரோமோ ஒன்றில் காரசாரமான விவாதம் இன்று வீட்டிற்குள் களைக்கட்ட தொடங்கியிருக்கிறது. அதில், சுரேஷ் தாத்தா மற்றும் வனிதா ஒரு ப்ரோமோவில் தனக்கென உரிய பாணியில் சவுண்டு விட ஆரம்பித்துள்ளனர்.

சுரேஷ் தாத்தா

அதில், சுரேஷ் தாத்தா இந்த மாறி வந்துருக்கோம் ஒரு பிரஸ், இப்பிடி ஸ்டார் பத்தி பேசுறிங்களே என கேட்பது போலும், அதற்கு வனிதா நீங்க ஸ்டார் இல்லை என பதில் சொல்வதும் இடம் பெற்றுள்ளது. மேலும், இருவருக்குமான வாக்குவாதம் அதிகமாக வீட்டின் மற்ற போட்டியாளர்கள் அமைதியாய் இருவரையும் கவனிப்பதுபோல் தற்போது ரிலீஸான ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் வனிதா

மேலும், ஒரு படி அதிகமாகி அடக்கம் வேணும் எனக்கூற, எதுக்கு அடக்கம் வேணும் என வனிதா அவர்கள் பதில் கூற இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியுள்ளது. ஏற்கானவே கிளம்பிய காபி பிரச்சனை கசப்பு குறையாது வீட்டில் பல பேர் சுவைத்து வரும் நிலையில் ஓட்டு எப்படி இருக்கும் எனக் குழம்பி வருகின்றனர். வீட்டிலும் சரி, வெளியிலும் சரி வனிதாவிற்கு எதிராக உள்ள நிலையில் மீண்டும் இந்த அடக்கம் வேணும் பிரச்சனையும், என்ன பிரச்சனை கிளம்ப இருக்கிறதோ எனத் தெரியாமலே பலரும் பலவிதமா யூகித்துக் கொண்டிருக்கும் வகையில் தற்போதைய ப்ரோமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் சண்டை

புதிதான டாஸ்க் போல் தெரிந்தாலும், இருவரின் பேச்சும் விவாதத்தின் உச்சமாக உள்ளது. பிக்பாஸ் வீட்டிற்கு வெளியே இருவரின் நட்பும் அனைவரும் பார்த்தது தான்.  ஆனால், வீட்டிற்கு அடிக்கடி சண்டை வருவதும் இவர்கள் இடையில் தான். இருவரும் போடும் சண்டை விளையாட்டு சண்டையா விபரீத சண்டையா  எனப் பல பிக்பாஸ் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். தொடர்ந்து 24 மணி நேரமும் பிக்பாஸ் ஒளிபரப்பப்பட்டு வருகின்ற நிலையில் ப்ரோமோவைப் பார்த்து பலரும் குழம்பி வருகின்றனர்.

முகமே சுண்டி போச்சு! புது கோமாளிய கடுமையா திட்டிய Chef தாமு.. அதுக்கு அப்றம் நடந்ததுதான் ஆசம்!

தொடர்புடைய இணைப்புகள்

Controversies between vanitha and suresh - exciting bigboss house

People looking for online information on சுரேஷ் தாத்தா, பிக்பாஸ் வனிதா, பிக்பாஸ் வீடு, Bigboss house, Bigbossultimate, Controversy, Fight, Suresh, Vanitha will find this news story useful.