‘செம்மடா சூப்பர்’... இயக்குநர் பா.இரஞ்சித் வாழ்த்து... ’காயல்’ பட நாயகன் லிங்கேஷ் நெகிழ்ச்சி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

‘மெட்ராஸ்’ படத்தில் அறிமுகமாகி ‘கபாலி’, ‘பரியேறும் பெருமாள்’, ‘கஜினிகாந்த்’ உள்ளிட்ட படங்களில் தனது தனித்துவமான நடிப்பில் சிறந்த நடிகர் என பெயரெடுத்தவர் நடிகர் லிங்கேஷ்.

வில்லன், நண்பன் என முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவந்த லிங்கேஷ் தற்போது இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்து முடித்துள்ளார். எழுத்தாளர், கவிஞர் தமயேந்தி இயக்கும் ‘காயல்’ படத்திலும், ஜெய் அமர்சிங் இயக்கும் ‘காலேஜ்  ரோடு’ ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் தமயேந்தி இயக்கும் ‘காயல்’ படத்தின் டப்பிங் பணிகள் முடிந்துள்ளதாக ‘காயல்’ படத்தின் ஹீரோயின் ஸ்வாகதா கிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.  இதனை அடுத்து இப்படத்தின் கதாநாயகன் லிங்கேஷிடம் படம் குறித்து  கேட்டோம்,

“வில்லனாக இருந்து சின்ன சின்ன ரோல் பண்ணிட்டு ஒரு மெயின் லீடா பண்ணணும்ங்றது எல்லா நடிகருக்குள்ளும் இருக்கும் ஆசைதான். அப்படிதான் நான் இந்த இரண்டு படங்களையும் பார்க்கிறேன். இந்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்தியிருக்கேன்னு நினைக்கிறேன். முதலில் ‘காலேஜ் ரோடு’ கமிட் ஆனேன் படத்தின் படப்பிடிப்பு முடிந்து அதோட ட்ரெய்லர் பார்த்து தமயேந்தி அழைத்து ‘காயல்’ படத்திற்கு பேசினார். ‘காலேஜ் ரோடு’ படத்தின் எல்லா பணிகளும் முடிந்து வெளிவர தயாராக இருக்கிறது. ‘காயல்’ படத்தின் டப்பிங் பணிகள் நடந்துக்கொண்டிருக்கிறது.


‘காலேஜ் ரோடு’ திரைப்படத்தை வாமனன், என்றென்றும் புண்ணகை, மனிதன், ஆகிய படங்களில் அசோஷியேட்டாக பணியாற்றிய ஜெய் அமர் சிங் இயக்குகிறார். கல்லூரி மாணவர்கள் சந்திக்கும் முக்கியமான பிரச்னையைப் பற்றி இந்தப் படம் பேசுகிறது. இந்தப் படத்தில் கார்த்திக் சுப்ரமணியன் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். ‘ஜீவி‘ படத்தின் ஹீரோயின்  மோனிகா சின்ன கொட்லா, ‘96‘ படத்தின் ஹீரோயின் பொம்மு லக்ஷ்மி, ஆகியோர் நடித்திருக்கிறார்கள். ஆஃப்ரோ இந்தப் படத்திற்கு இசை அமைத்திருக்கிறார்.

தமயேந்தியின் ‘காயல்‘ படத்திற்கு ஜஸ்டின் இசை அமைத்திருக்கிறார். காயத்ரி, ஸ்வாகதா கிருஷ்ணன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளனர். அனுமோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘காயல்’ திரைப்படம் இதுவரை பேசப்படாத நுட்பமான அரசியல் பேசும் கதையாக இருக்கும். பெண்களுடைய உளவியல் சார்ந்த பிரச்னையை பொயட்டிக்கா பேசக்கூடிய படம்.  ஒரு பெண் இன்னெரு பெண்ணுடைய உளவியல் பிரச்னையைப் பற்றி பேசுவது மிக முக்கியமானது. அந்த உளவியலை இந்தப்படம் பேசும்.  தமயேந்தி இந்தக் கதைகளத்தைக் கையில் எடுத்து படமாக்குவதே பெரிய விஷயம். எனக்குலாம் கதை கேட்கும் போது வியப்பாக இருந்தது.

நான் ரஞ்சித் அண்ணனோட பட்டறையில் இருந்து வந்ததால் இயக்குநர் தமயேந்தியின் படம் பேசக்கூடிய அரசியலை என்னால் புரிந்துக்கொள்ள முடிந்தது.  ரொம்ப ஜாலியா அரசியல் கத்துக்குற இடம் என்றால் அது இரஞ்சித் அண்ணனோட டீம்தான். இரஞ்சித் அண்ணா, படம் கமிட் ஆனதும் ‘செம்மடா சூப்பர்டா‘ படம் முடியட்டும் நான் பாக்குறேன், அப்படினு சொன்னாரு. எங்களோட வளர்ச்சியில முதல்ல மகிழ்ச்சி அடையுறது இரஞ்சித் அண்ணன்தான். ரெண்டு படமும் ரிலீஸ் ஆக தயாராக இருக்கு. மக்கள் மத்தியில் இந்தப் படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்“ என்றார்.

தொடர்புடைய இணைப்புகள்

Congratulations to director Pa.Ranjith Actor Lingesh is happy!

People looking for online information on Actor lingesh, Exclusive, Pa.Ranjith will find this news story useful.