THE LEGEND: “ஒரு COMMON MAN எப்படி LEGEND ஆகுறார்?” - ஒன்லைனை ரிவீல் செய்த சரவணன்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

லெஜண்ட் சரவணன் முதல் முறையாக தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் 'தி லெஜண்ட்' திரைப்படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிக பிரமாண்டமாக உருவாகியுள்ளது. அனல் அரசு இந்த படத்துக்கு சண்டை பயிற்சி அளித்துள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | போடு.! ஹாலிவுட் fans-க்கு ட்ரீட் தான்.. ஒரு நாள் முன்பே ரிலீஸ் ஆகும் “புல்லட் டிரெய்ன்”

ஊர்வசி ரவுத்தலா, ராய் லக்‌ஷ்மி, யாஷிகா ஆனந்த், நாசர், பிரபு, விஜயகுமார், லதா, ‘மறைந்த நடிகர்’ விவேக், யோகிபாபு மற்றும் பலர் நடித்த இந்த திரைப்படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இப்படத்தின் டிரைலர், 'மொசலோ மொசலு' பாடல், 'வாடிவாசல்' பாடல் ஆகியவை பல மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. சமீபத்தில் வெளியான 'பொ பொ பொ' பாடல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் பேசிய நடிகர் லெஜண்ட் சரவணன், “ஒரு காமன் மேன் இந்த உலகத்துக்கு நல்லது பண்ணுவதற்காக வருகிறார், அவர் நிறைய போராட்டங்களையும் இழப்பையும் சந்திக்கிறார். தன் கண் முன் இருக்கும் இந்த சவால்களை அடித்து நொறுக்கி அவர் எப்படி வெற்றி அடைகிறார்.? எப்படி ஒரு காமன் மேன் லெஜண்ட் ஆகிறார்.? இந்த உலகத்துக்கு அவர் என்ன கொடுக்கிறார் என்பதுதான் தி லெஜண்ட் படத்தின் கதை.

இந்த படம் எமோஷன், ஆக்‌ஷன், காதல், காமெடி என அனைத்தும் ஒருங்கிணைந்து சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து மக்களும் மீண்டும் மீண்டும் படம் பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள, ஒரு மாஸ் கமர்ஷியல் ஆக்‌ஷன் படம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கும் பான் இந்தியா படம் இது. படம் பார்த்துவிட்டு வரும்போது மிகப்பெரிய பாசிடிவான நம்பிக்கை கிடைக்கும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

தி லெஜண்ட் திரைப்படம் பான் இந்தியா அளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய 5 மொழிகளில் மிகுந்த பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக உருவாகியுள்ள இப்படம் ஜூலை 28 அன்று வெளியாகவுள்ளது.

Also Read | The Legend: “இந்த முறை அடிக்குற அடி மரண அடி..!!” - சரவணன் Mass Speech Video

THE LEGEND: “ஒரு COMMON MAN எப்படி LEGEND ஆகுறார்?” - ஒன்லைனை ரிவீல் செய்த சரவணன்.. வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Common Man becomes The Legend oneline Saravanan video

People looking for online information on Harris Jayaraj, JD Jerry, Legend Saravanan, The legend will find this news story useful.