நகைச்சுவை நடிகர் செந்திலுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாக அண்மையில் வெளியாகி வரும் தகவலை அடுத்து செந்தில் தற்போது விளக்கம் அளித்து வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார்.

நகைச்சுவை நடிகர் செந்தில் தமிழ் சினிமாவின் நகைச்சுவை சக்ரவர்த்திகளுள் குறிப்பிடத் தக்கவர். அவருடைய காமெடிகளை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. அவரின் வெவ்வேறு வகையிலான காமெடி கேரக்டர்களும் காமெடி வசனங்களும், காமெடி காட்சிகளும் இன்றுவரை தமிழ் சினிமாவில் மணிமகுடமாய் நிற்கின்றன. இந்நிலையில் தான் அவருக்கு கொரோனா என்கின்ற செய்தியை அறிந்ததும் தமிழ் சினிமா ரசிகர்கள் பலரும் அச்சப்பட்டனர். இந்த சூழலில் செந்தில் இதற்கு விளக்கம் அளித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில் தனக்கே உரிய பாணியில் வெகுளியாக பேசிய செந்தில், “எனக்கு கொரோனா பாதிப்பு வந்தது உண்மை தான். யாரும் பயப்பட வேணாம். நான் நல்லாருக்கேன். கொரோனா வந்தா யாரும் பயப்பட வேண்டியதில்ல. டெஸ்ட் எடுத்துகிட்டு தனிமைப்படுத்திக்கங்க. அடுத்த டெஸ்ட்டில் நெகடிவ் என வந்தால் வீட்டிலேயே ட்ரீட்மெண்ட் எடுத்துக்க சொன்னாங்க. ஊசி போட்டதால் எல்லாம் பெரியளவு பாதிப்பில்லை. நீங்களும் ஊசி போட்டுக்கங்க.. உடம்புக்கு ரொம்ப நல்லது.” என குறிப்பிட்டுள்ளார்.