நடிகர் விவேக்கின் மரணத்துக்கு திரைக்கலைஞர்கள், பிரபலங்கள் பலரும் அஞ்சலி செலுத்தி வரும் நிலையில் நகைச்சுவை சக்கரவர்த்தி கவுண்டமணி அஞ்சலி செலுத்த வந்திருந்தார்.
பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சிக்கும் பொதுவெளியில் தோன்றாத கவுண்டமணி விவேக்கின் இந்த மறைவு துயர நிகழ்ச்சியில் தம் துக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் பங்கெடுத்தார். விவேக், கவுண்டமணி இருவரும் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகள் பல ரசிகர்களால் மறக்க முடியாதவை.
குறிப்பாக மூடநம்பிக்கைகளுக்கு எதிராக விவேக் பேசியது போல் விவேக்கிற்கு முன்னதாக கவுண்டமணி பழைய சடங்குகளையும் பழமைவாதங்களையும் அதிரடியாக விமர்சித்தவர். கவுண்டமணியை போலவே விவேக்கும் தமது காமெடியில் பழமைவிவாத பிற்போக்குத் தனங்களை நக்கல் நையாண்டி பாணியில் விமர்சித்து கையாண்டிருப்பார்.
இப்படி ஒரு ஒற்றுமை இவர்களின் இருவரது நகைச்சுவை காட்சிகளிலும் நிறைந்திருக்கும். கவுண்டமணி செந்தில் நகைச்சுவை காலம், ஒரு சகாப்தம் என்றால், அந்த சகாப்தத்தை தொடர்ந்து ஏகோபித்த ஜனங்களின் மனதில் அதே நக்கல் நையாண்டி பானையில் இடைக்காலத்தில் அமர்ந்தவர் நடிகர், பத்மஸ்ரீ டாக்டர்.விவேக் என்பது குறிப்பிடத்தக்கது.
ALSO READ: காலமானார் விவேக்!.. சோகத்தில் ஆழ்த்திய மரணம்.. பேரதிர்ச்சியில் திரையுலகம்!