BONDA MANI : "உதவி செய்யுங்க..!..".. ICU-வில் நகைச்சுவை நடிகர் போண்டா மணி - கதறி அழுத சக நடிகர்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இலங்கையை பூர்விகமாகக் கொண்டவர் பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் போண்டா மணி.

Advertising
>
Advertising

Also Read | Cool Suresh : “வீட்டு வாடகை கூட பணம் இல்ல?”.. சிம்புவின் வார்த்தை போதும்.. கதறிய கூல் சுரேஷ்

1991-ம் ஆண்டு வெளியான பாக்யராஜின் 'பவுனு பவுனுதான்' என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமான போண்டா மணி, இப்படத்தை தொடர்ந்து சிறிய கதாபாத்திரங்களில் நடித்தார். பின்னர் காமெடி நடிகராக விவேக், வடிவேலு ஆகிய பல்வேறு முன்னணி நகைச்சுவை நடிகர்களுடன் கதாபாத்திரங்களிலும் நடித்து புகழ் பெற்றார்.

குறிப்பாக போண்டா மணி நடித்த 'சுந்தரா டிராவல்ஸ்', 'மருதமலை', 'வின்னர்', 'வேலாயுதம்', 'ஜில்லா' உள்ளிட்ட படங்கள் அவருக்கு தனி கவனத்தை எற்படுத்திக் கொடுத்தன.  2019-ஆம் ஆண்டு வெளியான 'தனிமை' எனும் படத்தில் நடித்திருந்த போண்டா மணி, தற்போது சிறுநீரகம் செயலிழந்து அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக பிரபல நடிகர் பெஞ்சமின் அழுது வீடியோ வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பான அந்த வீடியோவில், “அனைவருக்கும் வணக்கம். நான் நடிகர் பெஞ்சமின்.. அண்ணன், நகைச்சுவை நடிகர் போண்டாமணிக்கு இரண்டு கிட்னிகளும் செயலிழந்து விட்ட நிலையில் அவர் அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த வீடியோவைப் பார்க்கும் நண்பர்கள் அவருடைய மேல் சிகிச்சைக்கு உதவும்படி வேண்டுகிறேன்.

அவர் இலங்கையிலிருந்து வந்து தமிழகத்திற்கு தஞ்சம் வந்தவர். பல்வேறு தடைகளைத் தாண்டி சினிமாவில் சாதித்தவர். பிள்ளைகளை பெற்று வளர்த்து நல்லபடியாக ஆளாக்கினார். ஆதரவற்றவராக இந்தியாவுக்கு வந்த அவர், ஆதரவின்றி அவர் குழந்தைகளை விட்டுவிட்டு போய்விடக்கூடாது. நம்மால் முடிந்தவரை அவருக்கு உதவி செய்ய வேண்டும். நீங்கள் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள், அரசியல் பிரபலங்கள் மூலம் உதவி செய்யுங்கள்” என்று கண்ணீர்மல்க கோரிக்கை வைத்துள்ளார்.

Also Read | Raju Srivastava : சோகத்தில் ஆழ்த்திய பாலிவுட் நகைச்சுவை நடிகரின் மரணம்..! இதுதான் காரணமா..?

தொடர்புடைய இணைப்புகள்

Comedy actor bonda mani in ICU actor benjamin asks help

People looking for online information on Actor, Benjamin, Bonda Mani, Hospital will find this news story useful.