VIDEO : ''எந்த கலைஞனுக்கும் இப்படி ஆகவே கூடாது., இதுக்கு சேனல் உதவி செய்யனும்...'' - SETHU

முகப்பு > சினிமா செய்திகள்

By |

வடிவேல் பாலாஜியின் மறைவு குறித்து காமெடி ஆர்டிஸ்ட் சேது உருக்கமாக பேசியுள்ளார். 

விஜய் டிவியின் காமெடியனாக கலக்கியவர் வடிவேல் பாலாஜி. அது இது எது, கலக்க போவது யாரு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில், இவர் தனது காமெடியால் ரசிகர்களை கவர்ந்தார். இதனிடையே உடல்நல குறைவு காரணமாக., வடிவேல் பாலாஜி உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வடிவேல் பாலாஜியின் இறுதி சடங்கில் கலந்து கொண்ட மிமிக்ரி மற்றும் காமெடி ஆர்டிஸ்ட் சேது உருக்கமாக பேசினார். இதுகுறித்து பேசிய அவர், ''எப்போதுமே சிரித்து கொண்டிருக்கும், மகிழ்ச்சியான நபர் அவர். வடிவேல் பாலாஜியை போல பல மேடை கலைஞர்கள் இந்த கொரோனா வைரஸ் நேரத்தில், பணமில்லாமல் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். அவர்களுக்கு எல்லாம் அரசு ஏதாவது செய்ய வேண்டும். மேலும் சேனல் இந்த கலைஞர்களுக்கு உதவ வேண்டும்'' என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

 

VIDEO : ''எந்த கலைஞனுக்கும் இப்படி ஆகவே கூடாது., இதுக்கு சேனல் உதவி செய்யனும்...'' - SETHU வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

வடிவேல் பாலாஜிக்காக பேசும் சேது | Comedian Sethu on Vadivel Balaji's Death asks channel help

People looking for online information on Mimicry Sethu, Vadivel Balaji will find this news story useful.