புதுடெல்லி: நகைச்சுவை நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா உயிரிழந்துள்ள தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. .
Also Read | 150 கிமீ வேகத்தில் G P முத்து உடன் பைக் ரைடு.. TTF வாசன் மீது பாய்ந்த போலீஸ் கேஸ்! முழு தகவல்
கடந்த 1963-ம் ஆண்டு பிறந்த ராஜூ ஸ்ரீவஸ்தவா, சிறுவயதிலிருந்தே நகைச்சுவை நடிகராக வேண்டும் என எண்ணியவர். 1980-ஆம் ஆண்டில் இருந்து நகைச்சுவை நடிகராக அறியப்பட்ட இவர், 2005-ம் ஆண்டு நடந்த, "தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்ச்" நிகழ்ச்சியின் முதல் சீசனின் மூலமாக பிரபல ஸ்டான்ட்-அப் காமெடியனாகவும் திகழ தொடங்கினார்.
இதனை தொடர்ந்து பிரபல இந்தி திரைப்படங்களான, "மைனே பியார் கியா", "பாசிகர்", "பாம்பே டூ கோவா", "ஆம்தானி அட்டானி கர்ச்சா ரூபையா" ஆகிய படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்த ராஜூ ஸ்ரீவஸ்தவா உத்தரப் பிரதேச மாநிலத்தின் திரைப்பட வளர்ச்சிக் குழுவின் தலைவராகவும் பணியாற்றியவர்.
இந்நிலையில்தான் ராஜூ ஸ்ரீவஸ்தவா உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கும் போது திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக கடந்த ஆகஸ்டு 10-ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை முதலில் அளிக்கப்பட்டது. பின்னர், அவர் வெண்டிலேட்டரின் உதவுயுடன் மானிட்டர் செய்யப்பட்டார். இப்படி மருத்துவமனையில் 40 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த இவர், தற்போது உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 58.
ராஜூ ஸ்ரீவத்ஸவாவின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்துவரும் சுழலில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங, “நகைச்சுவை நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவாவின் மறைவு கவலையளிக்கிறது. சிறந்த நடிகர் மட்டுமல்லாமல், அவர் கலகலப்பான மனிதர். சமூக நடவடிக்கைகளிலும் ஈடுபாடு காட்டிய அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவரது ரசிகர்களுக்கும் என ஆழ்ந்த இரங்கல்கள். சாந்தி" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
Also Read | Cool Suresh : “வீட்டு வாடகை கூட பணம் இல்ல?”.. சிம்புவின் வார்த்தை போதும்.. கதறிய கூல் சுரேஷ்