"ஒரிஜினல் ஐடில வாங்க.. ABUSIVE லாங்வேஜ் வேணாம்ங்க!" - ட்விட்டரில் கர்ணன் வில்லன் காட்டம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் கர்ணன்.

இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து ரெஜிஷா விஜயன், லால், யோகிபபு, எம்ஜி குமார், லட்சுமி பிரியா சந்திரமௌலி, கௌரி கிஷன் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இருந்தனர். இந்த திரைப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து இருந்தார். இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வைரலாகின. குறிப்பாக தீ பாடிய பாடல்கள் இந்த படத்தில் பிரபலமாகின. மேலும் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்ட கர்ணன் திரைப்படத்தை கலைப்புலி தாணு தயாரித்து இருந்தார்.

இதனை அடுத்து இந்த திரைப்படத்தை பலரும் வெகுவாக பாராட்டினர். திரையரங்குகளில் நேரடியாக வெளியான இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தனுஷ் மீண்டும் மாரி செல்வராஜூடன் இணைவதாக அறிவித்தார். இந்த திரைப்படத்தில் நட்டி வில்லனாக நடித்திருந்தார். நடிகர் நட்டி நடராஜ் ஒரு அதிகாரம் மிக்க காவல்துறை அதிகாரியான கதாபாத்திரத்தை ஏற்று திறம்பட நடித்து இருந்தார்.

அதிகார மனப்பான்மை மிக்க காவல்துறை அதிகாரி ஒருவர் தன் ஈகோவினால் ஒரு ஊரையே அழிக்க நினைக்கிறார். அதற்கு எதிராக கர்ணன் திமிரி எழுகிறார். இந்த திரைப்படத்தில் நடித்த நட்டி பெருமளவில் பாராட்டை பெற்றார். இந்த திரைப்படம் முடிந்த கையோடு தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை பதிவிட்ட நட்டி, “எக்கோவ்.. எப்போவ்.. ஆத்தோவ்.. நான் இந்த திரைப்படத்தில் கண்ணபிரானாக நடித்து தான் இருக்கிறேன். என்னைய திட்டாதீங்க!” என்று குறிப்பிட்டிருந்தார்.

அந்த அளவுக்கு அவருடைய நடிப்பு தத்ரூபமான இருந்ததாக பலரும் பாராட்டினர். இந்த நிலையில் நடிகர் நட்டி தற்போது தம் ட்விட்டர் பக்கத்தில், “ஒரு படத்துல நடிக்கிறோம்...அதை விமர்சிக்க பலருக்கு உரிமை உண்டு.. ஆனா original id la வாங்க ... fake id la வராதீங்க.. யாருன்னே புரிஞ்சுக்க  முடியல..ஜாஸ்தியா வேற comment பண்றீங்க...abusive language வேணாங்க...” என்று பதிவிட்டிருக்கிறார்.

சதுரங்க வேட்டை உள்ளிட்ட பல படங்களில் நாயகனாக நடித்த நட்டி, சில திரைப்படங்களில் துணை நடிகராகவும் நடித்திருப்பதுடன் பாலிவுட் வரை பிரபலமான ஒரு புகழ் பெற்ற ஒளிப்பதிவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே அமேசான் ப்ரைமில் கடந்த மே மாதம் 14ஆம் தேதி முதல் கர்ணன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.

ALSO READ: கார்த்திக் நரேனின் "நரகாசூரன்" பிரபல ஓடிடியில் வெளியாகிறதா? .. பின்னணி தகவல் என்ன?

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Come from original id not fake id Karnan villain natty nataraj

People looking for online information on Dhanush, Karnan, Natty Natraj will find this news story useful.