விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 1 வெற்றிகரமாக ஓடியதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் தற்போது பெரும் வரவேற்பை பெற்று வந்தது.

அனைத்து தரப்பு ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பால் களைகட்டி வரும் இந்த நிகழ்ச்சியில் கனி, பாபா பாஸ்கர், ஷகிலா, பவித்ரா, அஷ்வின் உள்ளிட்டோர் குக்குகளாக ஃபைனலில் இருக்கின்றனர். இதேபோல் கோமாளிகளாக புகழ், சிவாங்கி, மணிமேகலை, சரத், பாலா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நடிகர் சிலம்பரசன், ஏ.ஆர்.ரஹ்மான், 99 சாங்ஸ் பட குழு கலந்து கொண்டனர். இதில் இரண்டாவது ரவுண்டில் பவித்ராவுக்கு கோமாளியாக சிவாங்கி கிடைத்தார். அப்போது குக் வித் கோமாளி சீசன் ஒன்றில் சிவாங்கி, அந்த குக்கை ஃபைனலில் வெற்றிபெற செய்ததாகவும் அது இப்போதும் ஒர்க் அவுட் ஆகும் என்றும் பவித்ரா கூறினார்.
குக் வித் கோமாளி 1வது சீசனில் வனிதா விஜயகுமார் வெற்றி பெற்றார் என்பதும் அவர் வெற்றி பெறும்போது கோமாளியாக உடனிருந்தவர் சிவாங்கி என்பதும் குறிப்பிடத்தக்கது.
ALSO READ: ‘செல்லப்பேரால் அழைத்த சிவாங்கி!’ .. ‘நான் உன் Fan சிவாங்கி’.. அஷ்வின் உருக்கம்!