சிவகார்த்திகேயன் நடிக்கும் 'டான்' படத்தின் முதல் சிங்கிள் JALABULAJANGU! வெளியான PROMO VIDEO! ரிலீஸ் எப்போ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'டாக்டர்' படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் 'டான்'. இந்தப் படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனமும் தயாரிக்கிறது. இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ளார்.

Advertising
>
Advertising

இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். டான் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதனை சோனி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். மேலும் படத்தின் முதல் சிங்கிள் பற்றிய அப்டேட் இன்று (15.12.2021) மாலை 5 மணிக்கு வெளியாகும் என முன்பே அறிவிக்கப்பட்டது. அறிவித்தது போல் டான் படத்தின் முதல் சிங்கிள் ஜலபுலஜங்கு எனும் பாடல் அனிருத் இசையில் லோகேஷ் வரியில் நாளை மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு படக்குழு பிரத்யேக Promo வீடியோவை வெளியிட்டுள்ளது. 

இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பிப்ரவரி 11 ஆம் தேதி கோயம்புத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பூஜையுடன் தொடங்கியது. பின்னர் முதற்கட்டப் படப்பிடிப்பு கொரோனா காரணமாக தடைபட்டது. பின் சமீபத்தில் மீண்டும் பொள்ளாச்சி, ஆக்ரா, சென்னையில் படப்பிடிப்பு துவங்கி நடைப்பெற்றது.  இந்த படத்தின் சூரி, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகளின் டப்பிங் ஏற்கனவே முடிந்துள்ளது,  கடந்த (10.12.2021) அன்று இந்த படத்தின் அனைத்து படப்பிடிப்பும் முடிந்துவிட்டதாக படக்குழு டிவிட்டரில் அறிவித்தது. 

டான் படம் வரும் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகும் என நம்பந்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Colourful Sivakarthikeyan Don Movie First Single Update

People looking for online information on Anirudh, அனிருத், சிவகார்த்திகேயன், சோனி, சோனி மியூசிக், டான், டான் மியூசிக், டான் ரிலிஸ், டான் ரிலீஸ், ரிலீஸ், Don, Don Release Date, Priyanka Mohan, Sivakarthikeyan, SK will find this news story useful.