சீரியல் நடிகை ரேஷ்மாவுக்கு விரைவில் டும்டும்டும்!!.. அவரே சொன்ன அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் அபி டெய்லர்ஸ்.

Colors Tamil Abi Tailors heroine marries serial actor viral post

இந்த சீரியலில் முதன்மை கதாபாத்திரமாக நடித்து வரும் ரேஷ்மா முரளிதரன் தமது காதலரும் சீரியல் நடிகருமான மதன் பாண்டியனை திருமணம் செய்துக் கொள்ளபோகும் தகவலை தமது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டு நடந்த மிஸ் மெட்ராஸ் போட்டியில், மூன்றாவது இடத்தைப் பிடித்து பின் மாடலிங் துறையில் இயங்கி வந்தவர் நடிகை ரேஷ்மா முரளிதரன். சென்னையில் நடந்த ஃபேஷன் ஷோவில் இவருக்கு சின்னத்திரை வாய்ப்பு கிடைத்தது. அதன்படி ஜீ தமிழின் பூவே பூச்சூடவா சீரியலில் முதலில் நடித்தார்.

அந்த சீரியலில் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ரேஷ்மா முரளிதரன் தற்போது கலர்ஸ் தமிழின் புதிய சீரியலான அபி டெய்லரஸ் எனும் தொடரில் அபியாக நடிக்கிறார்.

இதை அறிவித்த ரேஷ்மா முரளிதரன், பூவே பூச்சூடவே சீரியலில் தன்னுடன் நடித்த நடிகர் மதன் பாண்டியனை விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக ரசிகர் ஒருவருக்கு பதில் அளித்துள்ளார்.

விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் சீரியலில் அறிமுகமான  மதன் பாண்டியன், பூவே பூச்சூடவா சீரியலில் சுந்தர் எனும் கதாபாத்திரத்தின் மூலம் புகழ் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரேஷ்மா மற்றும் மதன் இருவரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

ALSO READ: Pregnancy-யிலும் வெண்பா-வாக கலக்கும் ஃபரீனா!.. Trend ஆகும் Latest Photoshoot!

மற்ற செய்திகள்

Colors Tamil Abi Tailors heroine marries serial actor viral post

People looking for online information on AbiTailors, ColorsTamil, Madhan pandian, Reshma Muralidharan, TVSerial, TVShow will find this news story useful.