"இத வெச்சு நீங்க கேப்டன் பதவியையே பறிக்கலாம்!..".. இந்த காயினுக்கு இவ்ளோ பவரா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எவ்வளவோ டாஸ்க்குகள் இதுவரை கொடுக்கப்பட்டன. அவை எல்லாவற்றையும் தாண்டி சூடுபிடிக்க தொடங்கியது காயின் டாஸ்க்கில் தான்.

coin collector contestant can made new captain biggbosstamil5

இதன் மூலம் பிக்பாஸ் வீட்டுக்குள் இன்னும் குழுவாக சேர்ந்து போட்டியாளர்கள் இயங்கத் தொடங்கினர். ஒருவருக்கு பிடித்தவர்கள் யார்? யார் யாருக்கு உதவி நினைக்கிறார்கள்? குழுவாக சேர்ந்து ஒரு குழுவினர் யாருக்கு உதவி நினைக்கிறார்கள்? யாரெல்லாம் குழுவாகச் சேர்கிறார்கள்? என்பன போன்ற பல விஷயங்களை இந்த டாஸ்க் வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

coin collector contestant can made new captain biggbosstamil5

பஞ்சதந்திரம் என்கிற பெயரில் ஐந்து நாணயங்களை போட்டியாளர்கள், நாமினேஷன் லிஸ்டில் இருக்கும் தங்களுடைய நண்பர்களை காப்பாற்றுவதற்காக எடுத்துக் கொடுக்கும் வகையில் உருவாக்கப்பட்டது இந்த டாஸ்க். இந்த நிலையில் அனைவரும் நாணயத்தை எடுத்த பின்னர், தற்போது இந்த டாஸ்க் முடிவடைந்து விட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் பிக்பாஸ்.

அதில், "இந்த நாணயம் வைத்திருக்கும் நபர்கள் தங்களையோ அல்லது தான் விரும்பும் ஒரு நபரையோ காப்பாற்றலாம். தலைவர் போட்டிக்கு தேர்வான நபரின் பதவியை உடனே பறித்து தன்னையோ தனக்கு வேண்டிய ஒரு நபரையோ அந்த வார தலைவராக நியமனம் செய்து கொள்ளலாம்"  என்று பிக்பாஸ் கூறுகிறார்.

இதில் அவரவரும் தங்களிடம் இருக்கும் நாணயங்களை பிக்பாஸின் முன் ஆஜராகி காண்பிக்கின்றனர். இது தொடர்பான புரோமோவும் வெளியாகி இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Coin collector contestant can made new captain biggbosstamil5

People looking for online information on பிக்பாஸ், Biggboss, Biggbosstamil, BiggBossTamil5, BiggBossTamilSeason5 will find this news story useful.