கோப்ரா படத்தின் திருச்சி நிகழ்ச்சி..ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் விக்ரம் செல்ஃபி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் ரிலீஸை ஒட்டி திருச்சி நகரில் நடந்த ரசிகர்கள் சந்திப்பு விழாவில் விக்ரம் கலந்து கொண்டார்.

Advertising
>
Advertising

Also Read | ஜெர்மனி டூர் முடிஞ்சது.. அடுத்து ஐரோப்பாவில் இந்த நாடு தான்! பிரியா பவானி சங்கர் பகிர்ந்த PHOTOS!

விக்ரம் நடிப்பில் 'கோப்ரா' படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி முடித்துள்ளார். இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.

கோப்ரா படம், வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு படத்தின் டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நடிகர் விக்ரம் தென்னிந்தியா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதில் முதல்கட்டமாக இன்று காலை திருச்சி தெப்பக்குளம் புனித ஜோசப் கல்லூரியில் நடந்த நிகழ்வில் கலந்து கொண்டார். உடன் நடிகை ஶ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி ரவி, மீனாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு திரண்டிருந்த ரசிகர்கள் மத்தியில் விக்ரம் எடுத்த செல்ஃபி புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இந்த நிகழ்வில் நடிகர் விக்ரம் உருவம் வரைந்த ஓவியத்தை கல்லூரி மாணவர்கள் சியான் விக்ரமுக்கு பரிசாக அளித்தனர்.

திருச்சியை தொடர்ந்து இன்று மாலை மதுரை கோரிப்பாளையம் அமெரிக்கன் கல்லூரியில் நடக்கும் நிகழ்வுகளில் படக்குழுவினர் கலந்து கொள்ள உள்ளனர். நாளை கோயம்புத்தூரில் GRD கல்லூரி மற்றும் ப்ரோஜோன் மாலில் நடக்கும் நிகழ்வுகளில் விக்ரம் கலந்து கொள்ள உள்ளார்.

பின்னர்‌  25 ஆம் தேதி சென்னையில் நடக்கும் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்கிறார். பின்னர் கொச்சி, பெங்களூர், ஐத்ராபாத் நகரங்களுக்கு முறையே அடுத்தடுத்த நாட்களில் செல்கிறார்.

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | 'கோப்ரா' படத்தின் ரிலீஸ்.. திருச்சி, மதுரை, கோவை வரும் விக்ரம்.. எப்போ? எங்கே? முழு விவரம்

தொடர்புடைய இணைப்புகள்

Cobra Team Vikram Mirnalini Ravi Srinidhi Shetty Selfie at Trichy

People looking for online information on Chiyaan Vikram, Cobra, Mirnalini Ravi, Selfie, Srinidhi Shetty, Trichy, Vikram will find this news story useful.