விக்ரம் நடிக்கும் கோப்ரா.. படக்குழு வெளியிட்ட கல்ர்ஃபுல்லான சூப்பர் ரொமான்டிக் ஸ்டில்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் புதிய ஸ்டில்கள் வெளியாகி உள்ளன.

Advertising
>
Advertising

Also Read | இந்த ஜூலை 2வது வாரம் OTT-யில் ரிலீசாகும் சூப்பர் திரைப்படங்கள்! எப்போ? எதுல? முழு தகவல்

விக்ரம் நடிப்பில் 'கோப்ரா' இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி முடித்துள்ளார். இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். கோப்ரா படத்தின் அனைத்து படப்பிடிப்பும் (14.02.2022) அன்றுடன் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக 3 வருடங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கோப்ரா படம், ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது.

கோப்ரா படத்தின் சேட்டிலைட் உரிமம் கலைஞர் டிவிக்கு விறக்கப்பட்டுள்ளது. கோப்ரா படத்தின் UK & ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

முன்னதாக கோப்ரா படத்தில் இருந்து தும்பி துள்ளல், உயிர் உருகுதே மற்றும் அதீரா உள்ளிட்ட சிங்கிள் பாடல்களும் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்நிலையில் கோப்ரா படத்தின் உயிர் உருகுதே பாடலில் இருந்து புதிய ஸ்டில்களை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. உயிர் உருகுதே பாடல், நடிகர் விக்ரம் & ஸ்ரீநிதி ஷெட்டி இடையேயான ரொமாண்டிக் பாடலாக அமைந்துள்ளது.

Also Read | ஸ்ரீ ராஜராஜ சோழனாக ஜெயம் ரவி.. போர் பின்னணியில் பொன்னியின் செல்வன் படத்தின் புதிய போஸ்டர்!

தொடர்புடைய இணைப்புகள்

Cobra Movie Uyir Urugudhey Song HD Stills Released

People looking for online information on Cobra movie, Cobra movie Uyir Urugudhey Song, Uyir Urugudhey Song, Vikram will find this news story useful.