கோப்ரா படத்தின் டிரெய்லர் எப்போ வரும்? சியான் விக்ரம் கொடுத்த அதிரடி அப்டேட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் டிரெய்லர் ரிலீஸ் குறித்த அப்டேட்டை  நடிகர் விக்ரம் தெரிவித்துள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | "அடுத்த படமும் இவர் Direction'ல தான்.." சியான் விக்ரம் கொடுத்த தெறி அப்டேட்!!.. உற்சாகத்தில் ரசிகர்கள்

விக்ரம் நடிப்பில் 'கோப்ரா' படத்தை இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி முடித்துள்ளார். இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக 3 வருடங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார். முன்னதாக கோப்ரா படத்தில் இருந்து தும்பி துள்ளல், உயிர் உருகுதே மற்றும் அதீரா உள்ளிட்ட சிங்கிள் பாடல்கள் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. மேலும் 2 பாடல்களில் தராங்கினி எனும் ஒரு பாடலும்  "ஏலே இளஞ்சிங்கமே" எனும் மற்றொரு பாடலும் சில நாட்களுக்கு முன் இசை வெளியீட்டு விழாவில் வெளியிடப்பட்டது.

கோப்ரா படம், வரும் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திரையரங்கில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு டிவிட்டரில் நடந்த கலந்துரையாடல் நிகழ்வில் நடிகர் விக்ரம், ஸ்ரீநிதி ஷெட்டி, இர்பான் பதான், இயக்குனர் அஜய் ஞானமுத்து கலந்து கொண்டனர். அப்போது படத்தின் டிரெய்லர் எப்போது வரும்? என ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு நடிகர் விக்ரம் பதில் அளித்துள்ளார். "கோப்ரா படத்தின் டிரெய்லர் பட ரிலீஸ் தேதிக்கு 10 நாட்கள் முன் வெளியாகும் என்றும் டிரெய்லர் சிறப்பாக இருக்கும்.  ஸ்ரீநிதி ஷெட்டியின் நடனம் ஆடும் காட்சியும் இர்ஃபான் பதான் கிரிக்கெட் ஆடும் காட்சியும் டிரெய்லரில் இருக்கும்" என நடிகர் விக்ரம் கூறியுள்ளார்.

கோப்ரா படத்தின் சேட்டிலைட் உரிமம் கலைஞர் டிவிக்கு விற்கப்பட்டுள்ளது. கோப்ரா படத்தின் UK & ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.  இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Also Read | சூர்யா படத்துக்காக.. மீண்டும் சிறுத்தை சிவாவுடன் இணைந்த பிரபல இசை அமைப்பாளர்?!.. அதிரடி தகவல்

தொடர்புடைய இணைப்புகள்

Cobra Movie Trailer Release Update from Actor Vikram

People looking for online information on Cobra, Cobra Movie Trailer Release, Vikram will find this news story useful.