விக்ரம் நடிக்கும் 'கோப்ரா'.. தமிழக ரிலீஸ் உரிமத்தை கைப்பற்றிய முன்னணி தயாரிப்பாளர்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விக்ரம் நடிப்பில் 'கோப்ரா' இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி முடித்துள்ளார்.

Advertising
>
Advertising

இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.

கோப்ரா படத்தின் அனைத்து படப்பிடிப்பும் (14.02.2022) அன்றுடன் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக 3 வருடங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்டர்கள்,  சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கோப்ரா படத்தின் சேட்டிலைட் உரிமம் கலைஞர் டிவிக்கு விறக்கப்பட்டுள்ளது. கோப்ரா படத்தின் UK & ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

கோப்ரா படம், ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இச்சூழலில் கோப்ரா படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. பிரத்யேக அறிவிப்பு வீடியோவுடன் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

தொடர்புடைய இணைப்புகள்

Cobra Movie Tamilnadu Rights Bagged by Red Giant Movies

People looking for online information on Cobra, Tamilnadu, Udhayanidhi Stalin, Vikram will find this news story useful.