விக்ரம் நடிக்கும் கோப்ரா.. வெளியான EXCLUSIVE ரிலீஸ் போஸ்டர்! எப்படி இருக்கு?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

”கோப்ரா” படத்தின் புதிய போஸ்டர் வெளியாகி உள்ளது.

Advertising
>
Advertising

Also Read | தமிழில் ரிலீஸாகும் ரன்பீர் கபூர் நடிக்கும் PAN INDIA படம்.. வெளியான சூப்பர் போஸ்டர்ஸ்!

சியான் விக்ரம். கடைசியாக 2019 ஆம் ஆண்டு கமல்ஹாசன் தயாரித்த கடாரம் கொண்டான் படத்தில் நடித்தார். தற்போது துருவ நட்சத்திரம், கோப்ரா, பொன்னியின் செல்வன் படங்களில் நடித்து வருகிறார்.

விக்ரம் நடிப்பில் 'கோப்ரா' இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கி முடித்துள்ளார். இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடிக்கின்றனர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்கிறார்.

கோப்ரா படத்தின் அனைத்து படப்பிடிப்பும் (14.02.2022) அன்றுடன் நிறைவடைந்ததாக படக்குழு அறிவித்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா காரணமாக 3 வருடங்கள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் போஸ்டர்கள்,  சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

கோப்ரா படத்தின் சேட்டிலைட் உரிமம் கலைஞர் டிவிக்கு விறக்கப்பட்டுள்ளது. கோப்ரா படத்தின் UK & ஐரோப்பா தியேட்டர் ரிலீஸ் உரிமத்தை பிரபல அகிம்சா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. கோப்ரா படம், ஆகஸ்ட் மாதம் 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ளது. இச்சூழலில் படக்குழு முதல்முறையாக ரிலீஸ் தேதியுடன் படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இந்த போஸ்டரை டிசைனர் சிவம் சி கபிலன்  வடிவமைத்துள்ளார்.

Also Read | பா.ரஞசித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் புதிய படம்.. லேட்டஸ்ட் ஷூட்டிங் அப்டேட்!

தொடர்புடைய இணைப்புகள்

Cobra Movie New Release Date Poster Released

People looking for online information on Cobra movie, Cobra Movie Release Updates, Vikram will find this news story useful.