"கோப்ரா" பட சண்டை காட்சிக்கு நாங்க பட்ட கஷ்டம் இருக்கே .. வலிமை பற்றியும் சுப்பராயன் ஓபன் டாக்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : கோப்ரா படத்தில் உள்ள சண்டை காட்சிகள் குறித்து Stunt Master திலீப் சுப்புராயன் நேர்காணல் மூலம் பதில் அளித்துள்ளார்.

Advertising
>
Advertising


பிரபல நடிகர்கள்

விக்ரம் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் தான் கோப்ரா. சஸ்பென்ஸ், சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தை, எஸ்.எஸ் லலித்குமார் தயாரிக்க, அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.

ஸ்ரீநிதி ஷெட்டி, கே.எஸ்.ரவிகுமார், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் எனப் படத்தில் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறார்கள. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய, புவன் ஸ்ரீனிவாசன் எடிட் செய்கிறார்.

"சார் ப்ளீஸ் என் படத்தை பாருங்க" - ரஜினிக்கு வேண்டுகோள் வைத்த இளம் ஹீரோ!


நல்ல வரவேற்பு

படத்தில் விக்ரம் ஏழு  வேடங்களில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் "தும்பி துள்ளல்" என்ற பாடல் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. அதன்பின் வந்த படத்தின் டீசரும் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது எனலாம். இப்படம் நான்கு பகுதிகளாக படமாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Exclusive : மின்னல் முரளி.. மிரள வைத்த ஷிபு கேரக்டர்.. சூப்பர் வில்லன் குருசோமசுந்தரம் பேட்டி!


ரொம்ப கஷ்டப்பட்டோம்

இந்நிலையில் இப்படத்திற்கும் திலீப் சுப்பராயன் தான் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார். இந்த சண்டை காட்சிகள் குறித்து  அவர் கூறுகையில், விக்ரம் இந்த படத்திற்கு மிகவும் மெனக்கட்டு நடித்திருக்கிறார். ஒரு கெட்டப் போடுவதற்கு கிட்டத்தட்ட அவருக்கு 8 மணி நேரம் ஆகும். அதன் பின் அதன் காட்சியை படமாக்கப்பட்டு திரும்பவும் அதனை அகற்ற ரொம்ப நேரம் ஆகும்.

இந்த படத்தில்  வேற ஒரு சியான் விக்ரமாக இருக்கிறார், இப்படத்தில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சிகள் குறித்து பல முக்கியமான விஷயங்களை நேர்காணல் மூலம் கூறியுள்ளார். மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் அஜித் குமாரின் வலிமை படத்திற்கும் இவர் தான் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பல படங்கள்

நடிகர் விக்ரம் இப்போது மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்‘, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘மகான்‘, பா.ரஞ்சித்தின் படம் என பல படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். இதில் ‘மகான்‘ படம், இப்போது ரிலீஸுக்கு தயாராகிவிட்டது. கோப்ரா படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமுடன் காத்துகொண்டு இருக்கின்றனர்.

"கோப்ரா" பட சண்டை காட்சிக்கு நாங்க பட்ட கஷ்டம் இருக்கே .. வலிமை பற்றியும் சுப்பராயன் ஓபன் டாக் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Cobra movie fight sequence experience shared by Dhilip Subbarayan

People looking for online information on கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், கோப்ரா, சஸ்பென்ஸ், சைக்கலாஜிக்கல், திலீப் சுப்பராயன், Cobra movie, Dhilip Subbarayan, Stunt Master, Vikram will find this news story useful.