"இந்த மனுஷன் வேற லெவல்!!".. வைரல் ஆகும் விக்ரமின் கோப்ரா பட 'புது' கெட்டப்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சீயான் விக்ரம் நடிப்பில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் கோப்ரா.

இந்த படத்தில் நடிகர் விக்ரம் ஹீரோவாகவும், இர்பான் பதான் வில்லனாகவும் நடித்துள்ளனர். எப்போதுமே தான் நடிக்கும் திரைப்படங்களில் தனித்துவமான கதாபாத்திரங்களுக்கு இடம் கொடுக்கும் விக்ரம், அந்த கதாபாத்திரங்களின் தோற்றத்துக்காக மிகவும் மெனக்கெடுவார்.

விக்ரம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் படம் கோப்ரா திரைப்படத்தில் விக்ரமுடன் கதாநாயகிகளாக ஸ்ரீநிதி ஷெட்டி, மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இர்ஃபான் பதான், கே.எஸ்.ரவிக்குமார், ஜான் விஜய் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தை லலித் குமார் தயாரித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது முடிந்துள்ள நிலையில், இப்படத்தின் பின்னணி வேலைகள் கொரோனா பாதிப்பு காரணமாக தற்காலிகமாக தொடங்கப்படாமல் இருக்கின்றன. இப்படத்தில் விக்ரம் புதிய கெட்டப்பில் மேக்கப் ரூமில் இருக்கும் புகைப்படங்களை அடுத்தடுத்து வெளியிட்டு வருவதை அடுத்து அந்த படங்கள் வைரலாகி வருகின்றன.

தவிர, நடிகர் விக்ரம் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் இயக்கத்தில் சியான்60 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ: "போன வருஷம் இதே நாள்.. மதியம்".. சுஷாந்த் சிங் மறைவு நாள்.. ட்விட்டரில் உருக்கும் ரசிகர்கள்!

Tags : Vikram, Cobra

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Cobra mass new get up vikram viral trending கோப்ரா விக்ரம்

People looking for online information on Cobra, Vikram will find this news story useful.