நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். இந்த ட்வீட் தற்போது ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
Also Read | "வேண்டாம் கோபால்ல்ல்...".. ரச்சிதாவை இமிட்டேட் செய்து கமல் கொடுத்த Thug Life பதில்!!
இந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினி காந்த். 1975 ஆம் ஆண்டு மறைந்த இயக்குனர் பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான அபூர்வ ராகங்கள் படத்தில் அறிமுகமானார் ரஜினி காந்த். அதன்பிறகு வெற்றிப் படிக்கட்டில் பயணிக்க துவங்கிய ரஜினி காந்த் தற்போது இந்திய சினிமாவின் ஐகான்களில் ஒருவராக அறியப்படுகிறார்.
ரஜினி காந்த் நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியான அண்ணாத்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி காந்தின் அடுத்த 169வது படமான ஜெயிலர் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தினை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இயக்குனர் நெல்சன் இயக்குகிறார்.
இந்நிலையில் இன்று (டிசம்பர் 12) சூப்பர் ஸ்டார் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து கேக் வெட்டி, கொண்டாடி வருகின்றனர் அவரது ரசிகர்கள். இதனிடையே தமிழக முதல்வர் முக. ஸ்டாலின் ரஜினி காந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து முதல்வர் முக.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்,"என் இனிய நண்பர் தமிழ் திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்"எனக் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.
அதேபோல, சினிமா நட்சத்திரங்கள் மற்றும் ரசிகர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்திற்கு சமூக வலை தளங்கள் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். முன்னதாக ரஜினியின் வீட்டுக்கு முன்னர் கேக் வெட்டி கொண்டாடிய அவரது ரசிகர்கள், சூப்பர் ஸ்டார் மீண்டும் தனது ரசிகர்களை சந்திக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read | ஜெயிலர் படத்தில் ரஜினி கேரக்டர் பெயர் இது தான்! போஸ்டருடன் வெளியான சூப்பர் தகவல்