சூர்யாவை பாராட்டிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.. இது தான் காரணம்! செம்ம

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் சூர்யாவை தமிழக முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்தியுள்ளார்.

Advertising
>
Advertising

Also Read | அருண் விஜய்யின் 'யானை' படத்தின் ஆக்ரோஷமான SPECIAL கிளிம்ப்ஸ்.. அனல் பறக்கும் வீடியோ!

2022 ஆம் ஆண்டுக்கான அகாடமி கமிட்டியில் சேர சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. சூர்யாவின் சமீபத்திய படங்களான சூரரைப் போற்று மற்றும் ஜெய் பீம் சர்வதேச அளவில் அங்கீகாரத்தைப் பெற்ற பிறகு இந்த நிகழ்வு நடந்துள்ளது.

சூர்யா நடித்த 'சூரரைப் போற்று' திரைப்படம் ஆஸ்கர் விருதுகளுக்கான போட்டியில் இருந்தது. 'சூரரைப் போற்று' திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்து பிரிவுகளிலும் போட்டியிட்டது. 366 படங்களில் ஒரே ஒரு இந்திய படமாக சூரரைப் போற்று அந்த ஆண்டு ஆஸ்கர் விருதுக்கான சிறந்த படத்திற்கான விருது பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஆனால் இறுதிப் பட்டியலுக்கு ‘சூரரைப் போற்று’ தேர்வு செய்யப்படவில்லை. ‘ஜெய்பீம்’  படத்தின் சில காட்சிகள் ஆஸ்கர் விருதுகளின் அதிகாரப்பூர்வ யுடியூப் பக்கத்தில் இடம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்கர் கமிட்டிக்கு அழைக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர் சூர்யா தான். அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் 2022 ஆம் ஆண்டுக்கான அகாடமி கமிட்டிற்கு அழைக்கப்பட்ட 397 கலைஞர்களின் பட்டியலை செவ்வாயன்று வெளியிட்டது, அதில் சூர்யாவின் பெயர் இடம் பெற்றுள்ளது.

இதற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் சூர்யாவுக்கு டிவிட்டரில் வாழ்த்து கூறியுள்ளார். அதில்,"தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, அகடமி விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள்! வானமே எல்லை!" என தெரிவித்துள்ளார்.

Also Read | ரசிகரின் பிறந்தநாள்.. தொலைபேசியில் அழைத்து வாழ்த்திய அஜித்! செம்ம வைரல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

CM MK Stalin appreciate Suriya for Academy Award Committee Membership

People looking for online information on Academy Award Committee Membership, CM MK Stalin, CM MK Stalin appreciate Suriya, CM Stalin, Suriya will find this news story useful.