ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், கவர்ந்த ஜிபி முத்து முதலிலியே வெளியேறினார். இதனை தொடர்ந்து முதல் எலிமினேஷனாக ‘மெட்டி ஒலி’ சாந்தி வெளியேற்றப்பட்டார். அடுத்த கட்டமாக அசல் வெளியேற்றப் படுவதாக கமல் அறிவித்தார். அடுத்த வாரத்தில் ஷெரினா, நிவாஷினி, விஜே மகேஸ்வரி, ராபர்ட் அடுத்தடுத்து வெளியேறிய நிலையில் தற்போது குயின்ஸி வெளியேறியுள்ளார். இதனிடையே வைல்டு கார்டு எண்ட்ரியாக மைனா பங்கேற்றுள்ளார்.
முன்னதாக பிக்பாஸ் வீட்டில் அசீம் தன் முன்னாள் மனைவியின் ஆடை குறித்து பேசிய பழைய பேச்சு மீண்டும் தற்போது சர்ச்சையானது. அதாவது தனது முன்னாள் மனைவி குறித்து பேசியிருந்த அசீம், “ஒரு திருமண நிகழ்வுக்கு போனா கூட இப்படி மாடர்னா ட்ரெஸ் பண்ணனுமா?.. ஆனால், அவள் அப்படிதான் ட்ரெஸ் போடுவா? ஒரு நிகழ்ச்சிக்கு கூட நான் ஏன் ஸ்கர்ட் போட்டு வரக்கூடாதுனு கேட்பாள்.. அதை கேட்கப்போய் தான் எங்களுக்குள்ள முதல் சண்டையே வந்தது. முதல் முதலில் உண்டான வாக்குவாதமே அந்த ட்ரெஸ்காக தான்..’ என்று கூறியிருந்தார்.
இதனை தொடர்ந்து கடந்த வாரம், பிக்பாஸ் வீட்டில் பழங்குடி வெர்சஸ் ஏலியன் டாஸ்க் போய்க்கொண்டிருந்தது. இந்த டாஸ்கிலும் முந்தைய டாஸ்குகள் போலவே போட்டியாளர்களிடையே சண்டை, சச்சரவுள் ஏற்பட்டன. இதில் டாஸ்கிற்காக ஏலியன்கள், பழங்குடியினரை எப்படி வேண்டுமானாலும் கோபப்படுத்தலாம் என்று முன்னமே பிக் பாஸ் கூறி இருந்தார்.
சும்மாவே ஆடும் நம் ஹவுஸ்மேட்ஸ்க்கு இப்படி ஒரு டாஸ்கில் இப்படியெல்லாம் பேசலாம் என்பது காலில் சலங்கை கட்டிவிட்டு ஆடச் சொல்வது போன்றதாச்சே.. இதில்தான் அசீம் – அமுதவாணன் இடையே நடந்த பயங்கரமாக சண்டை வைரலானது. அதன் பின்னர், அதிக டென்ஷன், சாப்பிடாமை, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றின் காரணமாக அசீம் மயங்கி விழுந்த விவகாரம் ஹவுஸ்மேட்ஸையும் ரசிகர்களையும் பரபரப்புக்குள்ளாக்கியது.
டாஸ்க்படி அசீம் வெளியில் தூங்க வேண்டும். ஆனால், உடல் நிலை சரி இல்லை என்பதால், அவர் மட்டும் உள்ளே பெட் ரூமில் தூங்கலாம் என ஏலியன் அணியினர் அனுமதிக்க, அனைவரும் தூங்கிய பின்னர் தூக்கத்தில் இருந்து விழித்து எழுந்த அசீம், பூக்களை பறித்தார். அதாவது தனது டாஸ்க்கை செய்தார். இதனால் அவருடன் மணிகண்டன் உள்ளிட்ட ஏலியன் அணியினர் வாக்குவாதம் செய்தனர். ஆனால் அசீமோ, தான் வெளியே இருந்து வந்திருந்தாலும் பூக்களை பறித்திருக்க முடியும் என்றும், அது டாஸ்க் தான் என்றும் கூறி சமாதானப்படுத்த முயன்றார்.
இறுதியாக கருத்து சொல்லி நாமினேட் செய்த விக்ரமன், “அசீமுக்கு டீமுடனான ஒத்துழைப்பு இல்லை, தனியே விளையாடியும் வெற்றி அடையவில்லை, ஆனால் அசீமின் நோக்கம் அவர் கவன ஈர்ப்பு செய்வதாகவே இருந்தது. அதே போல், சக மனிதரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே அமுதவாணன் மேல் கைவைத்தது மன்னிக்க முடியாதது. வாரவாரம் இப்படி செய்யும் அசீம், சனிக்கிழமை மட்டும் வேற மாதிரி நடந்துக்குறார். வலிமையான போட்டியாளர் என்பவர் நாகரிகமாக ஆடுபவர்தான். நீங்க அட்டக்கத்தி என்று நான் சொல்லிவிட்டேன். கட்ஸ் என்றால் நேரடியாக பேசுங்கள்” என கூறினார்.
விக்ரமனின் இந்த கருத்துக்கும் சரி, அசீமின் விளக்கத்துக்கும் சரி ஆதரவு எதிர்ப்பு கருத்துக்கள் இரண்டுமே வருகின்றன. அதேபோல் க்ளோன் அசீம், வாத்தி விக்ரமன் உள்ளிட்ட ஹேஷ் டேகுகளும் ட்ரெண்ட் ஆகி வருகின்றன.