LATEST: தமிழ் புத்தாண்டிற்கு KGF-2 உடன் மோத தயாராகும் ராகவா லாரன்ஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொல்லாதவன், ஆடுகளம், ஜிகர்தண்டா போன்ற படங்களைத் தயாரித்த தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகும் படம் ருத்ரன்.

இத்திரைப்படத்தில் ப்ரியா பவானி சங்கர் லாரன்சுக்கு ஜோடியாக நடிக்கிறார்.  கே.பி.திருமாறன் கதை, திரைக்கதை எழுதுகிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். பில்லா 2, மாஸ், காக்க காக்க படங்களின் ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகர் ISC ஒளிப்பதிவு செய்கிறார்.  

இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் ருத்ரன் படம் வெளியாகும் நாளை படக்குழு சார்பாக லாரன்ஸ் அறிவித்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 14, 2022 தமிழ் புத்தாண்டிற்கு வெளியாக உள்ளது. கேஜிஎஃப் திரைப்படத்தின் 2-ஆம் பாகம், ஏப்ரல் 14, 2022 அன்று வெளியாவதாக படக்குழு அதிகாரப்ப்பூர்வமாக ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தற்போது ராகவா லாரன்ஸ், வெற்றிமாறன் - கதிரேசன் தயாரிக்கும் 'அதிகாரம்', 'துர்கா' ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. பிரியா பவானி சங்கர், சிம்பு தேவன் இயக்கத்தில் வரவிருக்கும் ஹைப்பர்லிங்க் படமான 'கசட தபர' ரிலீஸுக்காக காத்திருக்கிறார். தனுஷின் 'திருச்சிற்றம்பலம்', 'ஹாஸ்டல்', 'ஓ மணப்பெண்ணே', இயக்குனர் ஹரி-அருண் விஜய் கூட்டணியில் 'ஏவி 33' படமும் அவரிடம் கைவசம் உள்ளன.

தொடர்புடைய இணைப்புகள்

Clash of titans KGF2 vs Raghava Lawrence Rudhran

People looking for online information on Kgf 2, Raghava Lawrence will find this news story useful.