நேற்று பிக்பாஸ் வீட்டில் நடந்த பட்டிமன்றம் டாஸ்க்கில் பாலாஜி கொளுத்தி போட்ட வெடிகள் பின்னர் நன்றாகவே வெடித்தன. சாப்பிடும் போது கூட யாரும் சேர்ந்து அமர்ந்து சாப்பிடுவதில்லை கேப்டன் ஒவ்வொருவரிடமும் சென்று கெஞ்சுகிறார் என பாலாஜி தெரிவித்தார். இதன் எதிரொலி பட்டிமன்றம் முடிந்து பிக்பாஸ் வீட்டில் தெரிந்தது. பின்னர் அனைவரும் அமர்ந்து சாப்பிடும் போது ரம்யா, ஷிவானி, ஆஜீத் மூவரும் அந்த இடத்தில் இல்லை போல.
இதனால் டென்ஷனான ரியோ அந்த மூவரையும் டார்கெட் செய்து பேசினார். இதற்கு ஆஜித் சொன்னதை காட்டவில்லை. ஆனால் ஷிவானி கோபப்பட்டதை பார்க்க முடிந்தது. என்னைய பத்தி பேசணும்னா என்கிட்ட நேரா பேசுங்க என அவர் கோபப்பட பதிலுக்கு ரியோ சமாதானம் செய்தார்.(முன்னதாக எவிக்ஷன் பிரீ பாஸ் விவகாரத்தில் ஷிவானி-ரியோ இருவரும் காரசார விவாதம் நடத்தியது குறிப்பிடத்தக்கது)
ஆனால் ரம்யா பாண்டியன் வழக்கம்போல சிரித்துக்கொண்டே ஸ்கோர் செய்து விட்டார். இந்த வீட்டுல குரூப்பிஸம் இருக்கு என ரியோ சொல்ல உங்க மனசுல தான் அது இருக்கு அதனால தான் அதுபத்தியே பேசுறீங்க என ரியோவிடம் கூறினார். தொடர்ந்து அர்ச்சனா வந்து சமாதானம் செய்ய ஒருவழியாக பிக்பாஸ் வீடு இயல்புக்கு திரும்பியது. எனினும் வரும் நாட்களில் இந்த பிரச்சினை பெரிதாக எதிரொலிக்கும் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்..