மாஸ்டர் ஆகஸ்ட் 14-ல் OTT RELEASE.?! - அமேசான் கொடுத்த விளம்பரத்தின் பின்னணி இதுதான்.!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமேசான் ப்ரைம் நிறுவனம் மாஸ்டர் ரிலீஸ் குறித்து வெளியிட்டுள்ள தகவல் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விஜய் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆன்ட்ரியா, ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை சேவியர் ப்ரிட்டோ தயாரித்துள்ளார். சம்மருக்கு வெளியாகவிருந்த மாஸ்டர் திரைப்படம் கொரோனா வைரஸ் பிரச்சனையால் தள்ளி போனது. 

இந்நிலையில் பிரபல OTT நிறுவனமான அமேசான் வெளியிட்டுள்ள புதிய விளம்பரம் பரபரப்பை ஏற்படுத்தியது. அமேசான் தளத்தில் இந்த ஆகஸ்டு மாதம் வெளியாகும் திரைப்படங்களின் வரிசையில், ஆகஸ்ட் 14 அன்று மாஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து., விஜய்யின் மாஸ்டர் ஏப்ரல் மாதம் தியேட்டரில் வெளியாகியிருந்தால், ஆகஸ்ட் மாதம் OTT-ல் வந்திருக்கும், அந்த விளம்பரம்தான் இது என சமூக வலைதளங்களில் கிசுகிசுக்கப்பட்டது. இதையடுத்து விவரம் அறிந்தவர்களிடம் விசாரித்த போது, மாஸ்டர் படத்தின் தியேட்டர் மற்றும் ஆன்லைன் ரிலீஸ் குறித்து எந்த முடிவுகளும் எடுக்கப்படவில்லை. இந்த விளம்பரத்தில் இடம்பெற்றிருப்பது வேறொரு மொழியில் உருவான மாஸ்டர் படமாகவே இருக்க வாய்ப்புண்டு'' என தெரிவிக்கின்றனர். 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

மாஸ்டர் ரிலீஸ் பற்றி அமேசான் கொடுத்த விளம்பரம் | Clarification on Amazon Ad of August Release of Master Movie

People looking for online information on Amazon Prime, Lokesh Kanagaraj, Master, Master Release, Vijay will find this news story useful.