இந்த நடிகைகளெல்லாம் பிக்பாஸில் கலந்து கொள்கிறார்களா ? - பரவும் தகவல் - உண்மை என்ன ?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நாடு முழுவதும் பல்வேறு மொழிகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அந்தந்த மொழிகளின் பிரபல நடிகர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்கள். தமிழில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 3 சீசன்களாக பெரும் வரவேற்பை பெற்றது.

தற்போது ஹிந்தியில் சல்மான் கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 14 புரோமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தெலுங்கிலும் நாகர்ஜூனாவின் பிக்பாஸ் 4 புரோமோ ரசிகர்கள் வெகுவாக கவர்ந்துள்ளது. இதனையடுத்து தமிழ் பிக்பாஸ் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

இந்நிலையில் தமிழ் பிக்பாஸ் சீசன் 4 குறித்த தகவல் ஒன்று பரவி வருகிறது. அதில், நடிகை அதுல்யா, ரம்யா பாண்டியன், சுனைனா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாக தகவல் பரவியது. இந்நிலையில் எங்கள் தரப்பில் அவர்களிடம் விசாரித்த போது, நடிகை அதுல்யா அந்த தகவலை மறுத்தார். நடிகை ரம்யா பாண்டியன் தனக்கு அப்படி ஒரு அழைப்பு வரவில்லை என்று தெரிவித்தார்.  

நடிகை சுனைனா தனது ட்விட்டர் பக்கத்தில், 'நான் ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டால், என் படங்களை யார் முடித்துக்கொடுப்பார் என்று ஆச்சரியமாக இருக்கிறது'' என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Clarification about Kamal Hassan's Bigg Boss season 4 news | தமிழ் பிக்பாஸ் சீசன் 3 பற்றி பரவும் தகவல் குறித்த விளக்கம்

People looking for online information on Bigg Boss 4, Kamal Haasan will find this news story useful.