''பாலாவின் வர்மா கைவிடப்பட்டதற்கு இது தான் காரணம்'' - பிரபல ஒளிப்பதிவாளர் விளக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விக்ரமின் மகன் துருவ் ஹீரோவாக அறிமுகமான படம் 'ஆதித்ய வர்மா'. 'அர்ஜூன் ரெட்டி' படத்தின் தமிழ் ரீமேக்கான இதனை,  இ4 எண்டர்டெயின்மென்ட் தயாரிக்க கிரீசயா இயக்கியிருந்தார். ரதன் இந்த படத்துக்கு இசையமைத்திருந்தார்.

இந்த படம் கடந்த நவம்பர் 22 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படம் முதலில் வர்மா என்ற பெயரில் இயக்குநர் பாலா இயக்கியிருந்தார். சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டது. பின்பு தான் ஆதித்ய வர்மா என்ற பெயரில் முற்றிலும் புதிதாக கிரீசயா இயக்கி வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இந்த படத்தின் வர்மா படம் குறித்து அந்த படத்தின் ஒளிப்பதிவாளர் சுகுமார், ''வர்மா' படத்தில் இயக்குநர் பாலாவுடன் பணிபுரிந்தது புதுவிதமான அனுபவம்.. அந்த படம் வெளியாக முடியாமல் போனதில் எங்களுக்கு வருத்தம் என்பதைவிட, ரசிகர்களுக்கு ஒரு நல்ல அனுபவம் கிடைக்காமல் போகிறதே என்கிற ஆதங்கம் தான் அதிகமாக இருக்கிறது.. நான் இரண்டு படத்தையும் பார்த்துவிட்டேன்.. நிச்சயம் பாலாவின் ’வர்மா’ ஒருபடி மேலே தான் இருக்கிறது..

இந்த படத்தை ஃபர்ஸ்ட் காப்பி அடிப்படையில் தான் இயக்குநர்  பாலா  இயக்கினார்.. படம் சென்சாருக்குப் போகும் கடைசி நாள்வரை இந்த படத்தை நிறுத்துவதற்கான எந்த ஒரு அடையாளமுமே தென்படவில்லை. ஆனால் தான் பணியாற்றும் படங்கள் எல்லாம் ஹிட் ஆவதால் தன்னை எப்போதுமே அறிவு ஜீவி என நினைத்துக் கொள்ளும் ஒரு முக்கியமான நபரின் தூண்டுதலால், தயாரிப்பாளர் வேறு வழியின்றி எடுத்த திடீர் முடிவு அது.

படத்தைப் பற்றிய விளக்கங்களை பாலாவிடம் கேட்டுவிட்டுப் பிறகு அவர்கள் முடிவெடுத்திருக்க வேண்டும்.. இயக்குநர் பாலாவைப் பொருத்தவரை இந்தப்படத்தை விக்ரமிற்காகத்தான் இயக்கினார்.

வர்மா படப்பிடிப்பின்போது எங்களுடன் சாதாரணமாகப் பேசிக்கொண்டிருக்கும் துருவ், அந்தப்படத்தின் டாக்டர் கதாபாத்திரத்திற்காக ஸ்டைலிஷாக ஆங்கிலம் பேசும்போது அவரது முகமே வேறுவிதமாக மாறுவதைக் கண்டு பாலாவே ஆச்சரியப்பட்டுப்போய், “இவன் அவங்க அப்பனையும் தாண்டிருவான்டா” என்று எங்களிடம் கூறியது இப்போதும் ஞாபகம் இருக்கிறது'' என்றார்.

Tags : Bala, Varma

Cinematographer Sukumar Speaks about Dhruv and Bala's Varma

People looking for online information on Bala, Varma will find this news story useful.