இந்த வருடம் திரைத்துறையில் பலரும் காலமானதை அடுத்து பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது இந்தியத் திரையுலகம்.

இதேபோல் திரைத்துறையின் முக்கிய பிரபலங்கள் பலரும் தங்களது நெருங்கிய உறவுகளை இழக்க நேரிடும் சம்பவங்களும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன. அண்மையில் தான் இயக்குநர் ஷங்கரும், இயக்குநர் வெங்கட் பிரபுவும் தத்தமது தாயாரை இழந்தனர்.
இதேபோல் கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படத்தை இயக்கிய பிரபல இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் தமது தந்தையும் பழம்பெரும் இயக்குநருமான ஜிஎன் ரங்கராஜனை இழந்தார். இயக்குநர் அருண்ராஜா காமராஜ் தமது மனைவியை பறிகொடுத்த சம்பவம் மொத்த திரையுலகையும் உலுக்கியது.
இந்நிலையில் தான் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவனின் தந்தையும், 3 முறை தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளருமான சிவன் (வயது 89) மாரடைப்பு காரணமாக திருவனந்தபுரத்தில் காலமானார். அவருக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ALSO READ: தனுஷ் - செல்வராகவனின் ‘நானே வருவேன்’ .. ஷூட் மற்றும் பாடல் .. செம்ம அப்டேட்!