நகைச்சுவை திரைப்படங்களின் மூலம் மக்களை மகிழ்விக்கும் இயக்குனர் ராம் பாலா. ஹாரர் காமெடி மாதிரியான படங்களிலே பேயையே கலாய்க்க கூடிய பேட்டர்னை பயன்படுத்தி, சந்தானத்தின் நடிப்பில் ‘தில்லுக்கு துட்டு’ என்கிற வெற்றிப் படத்தைக் கொடுத்தவர் ராம் பாலா.
75 நாட்கள் வரை ஓடி மாபெரும் வெற்றி பெற்ற இப்படத்தைத் தொடர்ந்து தில்லுக்கு துட்டு 2 படமும் பெரும் வெற்றி பெற்றது.
தற்போது மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி மற்றும் பலரது நடிப்பில் ‘இடியட்’ என்கிற முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமொன்றை இயக்குநர் ராம் பாலா இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஹாரர் காமெடி மட்டுமல்லாமல் ஆக்ஷன், திரில்லர், குடும்பம், காதல் உள்ளிட்ட ஜானர்களிலும் நகைச்சுவை கலந்து கொடுப்பதில் இயக்குநர் ராம் பாலா திறமை பெற்றவர் என்பதை இந்த டிரைலரில் இருந்து கண்டுகொள்ள முடிகிறது.
ஒரு நல்ல டைரக்டர் என்பவர் பணம் போட்ட முதலாளி, வாங்கிய டிஸ்ட்ரிபியூடர் மற்றும் பார்க்கும் மக்களை சந்தோஷப் படத்த வேண்டும் என்பதே ராம் பாலாவின் கருத்து என்று கூறப்பட்டுள்ளது. முன்னதாக ராம் பாலாவின் ஆஸ்தான நடிகரான நடிகர் சந்தானம், “நமக்கு சரி என்று தோன்றும் கருத்தை நாம் திரைப்படங்களில் உயர்த்திப் பேசலாம், அடுத்தவர்களை புண்படுத்தும் வகையில் அவர்களை தாழ்த்தி பேசக்கூடாது.
சினிமா என்பது சுமார் இரண்டு மணி நேரம் திரையரங்குகளில் எல்லா மதம் மற்றும் ஜாதிக்காரர்களும் ஒன்றாக அமர்ந்து நேரம் செலவிட்டு பார்க்க வேண்டுமென்று வருகிறார்கள். அங்கு இது தேவைப்படாத ஒரு விஷயம்.” என்று, தான் நடித்துள்ள சபாபதி திரைப்பட விழாவில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.