ஏராளாமான திரைப்படங்கள், தொலைகாட்சித் தொடர்கள், ஓடிடிக்கான திரைப்படங்கள் மற்றும் சீரிஸ் என இவற்றின் படப்பிடிப்பு, சமீப காலமாக அதிக அளவில் நடைபெற்று வருகின்றன.
Also Read | விஷால் - சுனைனாவின் புதிய படம்.. வெளியான செம்ம ரிலீஸ் தேதி! போடு.. பண்டிகை தான்.!
இதன் காரணமாக, இதற்கான தொழிலாளர்கள் தேவையும் அதிகம் இருக்கும் நிலையில், அதற்கான பற்றாக்குறையும் தற்போது ஏற்பட்டுள்ளது. பணிபுரியும் தொழிலாளர்கள் குறைவாக இருப்பதால், அந்த நிலைமையை சரி செய்வதற்காக, அவுட்டோர் யூனிட் அமைப்பு தமிழ்நாடு டெக்னீசியன் அமைப்பில் இருந்து, தொழிலாளர்களை எடுப்பதற்கான முயற்சிகளிலும் நடைபெற்று வருகின்றன.
அமைப்பு மூலம் நெருக்கடி
ஆனால், பெப்சி அமைப்பிலிலுள்ள டெக்னீசியன் அமைப்புகள், புதிதாக சேரும் நபர்களிடம் சுமார் 3 லட்ச ரூபாய் வரை செலுத்தச் சொல்லி, தங்கள் அமைப்பில் உறுப்பினர்களாக சேர வேண்டும் என கட்டாயப்படுத்தி தெரிவிப்பதாகவும் தகவல்கள் குறிப்பிடுகின்றது. அதே போல, பணம் செலுத்த முடியாதவர்கள், படப்பிடிப்பில் கலந்து கொள்ளக் கூடாது எனவும் பெப்சி அமைப்பு மூலம் நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது.
சுமூக முடிவு இல்லை?
இது தொடர்பான பேச்சுவார்த்தை, பெப்சி, அவுட்டோர் யூனிட் அமைப்பு, தயாரிப்பாளர் சங்கம் ஆகியோருக்கு இடையே கடந்த சில தினங்களாக நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த பேச்சுவார்த்தை மூலம் சுமூகமான முடிவு எட்டப்படவில்லை எனவும் தெரிகிறது.
இதன் காரணமாக, வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல், அவுட்டோர் யூனிட் அமைப்பு வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளனர். அவர்கள் படப்பிடிப்புக்கான உபகரணங்களை அனுப்பாமல் இருக்கும் பட்சத்தில், சுமார் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். அதே போல, 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், இணைய தொடர்கள் உள்ளிட்டவற்றின் படப்பிடிப்பும் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
Also Read | கார்த்தி பிறந்தநாளில் சர்ப்ரைஸ் …விருமன் Team வெளியிட்ட Exciting தகவல்!