BIRTHDAY BABY சமந்தாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரபலங்கள்… வைரலாகும் INSTA STORIES!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை சமந்தா இன்று தனது பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நிலையில் பலரும் அவருக்கு வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Advertising
>
Advertising

Also Read | ரசிகர்களுக்கு Surprise கொடுத்த ஜேம்ஸ் கேமரூன்…’அவதார்-2’ படத்தின் Title இதுதான்!

சமந்தா 2.0

பாணா காத்தாடி மற்றும் மாஸ்கோவின் காவிரி போன்ற படங்களில் நடித்திருந்தாலும் சமந்தாவுக்கு அடையாளத்தைக் கொடுத்தது விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் தெலுங்கு பதிப்புதான். அதன் பின்னர்  பல வெற்றிப்படங்களில் நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். சமீபத்தில் ரங்கஸ்தலம், சூப்பர் டீலக்ஸ், பேமிலி மேன் 2 இவருக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்தன. சமந்தா, தன்னுடன் சில படங்களில் நடித்த தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார்.  திருமணத்துக்குப் பிறகும் கூட தொடர்ச்சியாக நடித்து வந்த சமந்தா சமீபத்தில் கணவர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்தார். தற்போது  தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

பிறந்தநாள் பரிசு…

சமந்தா, விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவோடு இணைந்து நடித்துள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ இன்று அவரின் பிறந்தநாள் தினத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்தில் அவர் ஏற்று நடித்துள்ள கதீஜா கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. பிறந்தநாள் மற்றும் கதாபாத்திரத்திற்கான வரவேற்பு என இரட்டை சந்தோஷத்தில் இருக்கிறார் சமந்தா. இதையடுத்து ரசிகர்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அதுபோலவே பிறந்தநாள் பரிசாக சமந்தா நடிக்கும் சகுந்தலம் திரைப்படத்தின் புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது.

வாழ்த்திய பிரபலங்கள்…

ராஷ்மிகா மந்தனா, இயக்குனர் அட்லி, அட்லியின் மனைவி பிரியா அட்லி, கங்கனா ரனாவத், கியாரா அத்வானி, தமன்னா, சகுந்தலா திரைப்பட இயக்குனர் குணசேகரன் உள்ளிட்ட பலரும் வாழ்த்துகளைப் பகிர, அதை தன்னுடைய பக்கத்தில் பகிர்ந்து அனைவருக்கும் நன்றி கூறியுள்ளார். இது சம்மந்தமான அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்டோரிகள் வைரலாகி வருகின்றன.

8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

BIRTHDAY BABY சமந்தாவுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த பிரபலங்கள்… வைரலாகும் INSTA STORIES! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Cinema celebrities wished Samantha on her birthday

People looking for online information on Samantha, Samantha birthday, Samantha Birthday wishes will find this news story useful.