70 நாட்களைக் கடந்து பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் முதல் நாள் 18 போட்டியாளர்கள் இணைந்தனர். முதலாவதாக இந்த போட்டியில் முதல் முதலில் இணைந்த திருநங்கை போட்டியாளரான நமீதா மாரிமுத்து, தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேறினார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் நாடியா சாங், அபிஷேக், சின்னப்பொண்ணு, சுருதி, மதுமிதா, இசைவாணி, ஐக்கி பெர்ரி வெளியேறினர்.
இவர்களுள் அபிஷேக் மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் எண்ட்ரி கொடுத்து பின்னர் 2வது முறையாக வெளியேறினார். இதனிடையே கோரியோகிராஃபர் அமீர், நடிகர் சஞ்சீவ் உள்ளிட்டோர் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு எண்ட்ரி போட்டியாளர்களாக உள்ளே வந்து தற்போது விளையாண்டுக் கொண்டிருக்கின்றனர். இதனிடையே இந்த வாரம், கடைசியாக இமான் அண்ணாச்சி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
இந்த நிலையில் மீதமிருக்கும் போட்டியாளர்களிடையே ஒரு பரபரப்பான அறிவிப்பை பிக்பாஸ் தெரிவித்திருந்தார். அதன்படி இந்த வாரம் எலிமினேஷன் ப்ராசஸ்க்கு அனைவரையும், தான் நாமினேட் செய்வதாக குறிப்பிட்டு ஃபினாலே ரேஸ் என்கிற இறுதி வெற்றியை நோக்கிய இலக்கு இருப்பதை அனைவரிடத்திலும் வலுவாக நினைவூட்டி வலியுறுத்தினார்.
இதன் முதற்கட்டமாக பிக்பாஸ் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டில் தங்களுடைய குணநலன்கள், பிக்பாஸ் வீட்டில் தங்களுடைய செயல்கள் உள்ளிட்டவற்றை ஆதாரப்பூர்வமாக பேசி தங்களை பிக்பாஸ் வீட்டில் இருப்பதற்கு தகுதியானவர்களாக, அதாவது தங்களுடைய இருப்புக்கும் நியாயம் சேர்க்கும் வகையில், தங்களை தரவரிசை படுத்திக்கொண்டு, வரிசை எண்களில் சென்று உட்காரவோ, நிற்கவோ வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த தரவரிசை படுத்திக் கொள்ளுதலில், போட்டியாளர்கள் நேரடியாக ஒருவர் ஏன் அந்த தகுதியை அடையும் கூடாது என்று இன்னொருவரிடம் நேரடியாக விமர்சனம் செய்யலாம். இதேபோல், குறிப்பிட்ட ஒரு போட்டியாளர், தான் அந்த தரவரிசையில் இருக்க, ஏன் தகுதியானவர் என்று தன்னளவில் நியாயமான கற்பிதத்தை முன்வைக்கலாம். அதாவது, குறிப்பிட்ட அந்த தர எண் வரிசையில் அவர்களே சென்று அமரலாம்.
அப்படி சிபி 1-ஆம் இடத்தில் அமர்ந்து கொண்டு இருந்தார். இரண்டாமிடத்தில் பிரியங்கா அமர்ந்து கொண்டிருந்தார். இந்நிலையில் சிபியிடம் பேசிய நிரூப், “நீ இந்த வீட்டில் எதுவுமே செய்யவில்லை என்று பிக்பாஸ் கூறினார், நீ கேமே சரியாக ஆடவில்லை” என்று சிபி 1-ஆம் இடத்தில் அமர தகுதி இல்லாதவர் என்று சொல்லி, தன் தரப்பு காரணங்களை அடுக்கிக் கொண்டே வந்தார்.
அப்போது சிபி மீண்டும், “நான் ஒன்னும் உன்னை மாதிரி தொட நடுங்கி இல்லை, உன்னை மாதிரி பயந்தாங்கொளி இல்லை. உனக்கு பயம் இருக்கிறது, எதையும் வெளிப்படையாக பேசவும் செய்யவும் உனக்கு பயம் எனும்பொழுது நான் இங்கு ஒன்றாம் இடத்தில் இருப்பது எனக்கு ஒன்றும் தவறாக தெரியவில்லை! உன்னை இந்த வீட்டில் இருப்பவர்கள் எத்தனையோ முறை நேரடியாக பேசியும் விமர்சித்தும் இருக்கிறார்கள். அப்போது நீ சிரித்துக் கொண்டே இருந்திருக்கிறாய், எதையும் எதிர்கொள்வதற்கு உனக்கு பயம் தான்!” என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.
இதனால் நிரூப் மற்றும் சிபி இருவரிடையே வாதம் சற்று சூடான வாதமாக அனல் பறந்தது. இதனிடையே நிரூப் சொன்ன அதே காரணங்களுடன் சிபியின் டாஸ்க் பிஹேவியர் உள்ளிட்டவற்றை குற்றம் சாட்டி அக்ஷரா, சஞ்சீவ் மற்றும் ராஜூ மூவரும் தத்தம் பாணியில் சிபியிடம் வாதம் செய்தனர். இறுதியில் முதலாம் எண் வரிசையில் நின்ற சிபி இந்த வாரம் எவிஷன் ப்ரோசஸில் நாமினே செய்யப்பட் முடியாது என்று பிக்பாஸ் அறிவித்து, இந்த டாஸ்க்கை முடிவுக்கு கொண்டு வந்தார்.