பிக்பாஸ் வீட்டில் “சுற்றி சுற்றி வந்தீக” எனும் இசை நாற்காலி டாஸ்க் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தில் போட்டியாளர்கள் இசை ஒலிக்கும்போது நாற்காலியை சுற்றிச் சுற்றி ஓடிவரவேண்டும். இசை நிறுத்தப்படும்போது, அவரவரும் ஒரு நாற்காலியை பிடித்துக்கொண்டு அமர வேண்டும்.
அவ்வாறு நாற்காலி கிடைக்காத போட்டியாளர், நாற்காலியில் அமர்ந்திருக்கும் போட்டியாளரிடம் தன் பக்க நியாயத்தையும், தான் கேப்டன் ஆனால், தன்னால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்கிற தம் தரப்பு விளக்கத்தையும் சொல்லி கன்வின்ஸ் செய்து அவர்களிடம் ஒரு நாற்காலியை பெறலாம்.
அப்படி அக்ஷராவுக்கு நாற்காலி கிடைக்க முடியாமல் இருக்க, அவர் நிரூப் உள்ளிட்டோரிடம் பேசிப் பார்க்கிறார். ஆனால் சிபி, அக்ஷராவை அழைத்து என்னிடம் சொல், என்றபடி தன்னை கன்வின்ஸ் செய்யும் வாய்ப்பை வழங்குகிறார்.
அப்போது சிபியிடம் “நான் கேப்டன் ஆனால் டாஸ்க்கின் போது சண்டை போட்டுக்கொண்டாலும் உன்னுடன் எப்படி நான் அதை சரி செய்தேனோ, அதேபோல், மற்றவர்களிடையேயும் பிரச்சனையை தீர்த்து சரி பண்ணி வைப்பேன்” என கூற, “உண்மையாகவா?” என ஒருமுறை கேட்டுவிட்டு சிபி அக்ஷராவுக்கு நாற்காலி கொடுத்துவிட்டார்.
அவ்வளவுதான் அக்ஷரா துள்ளிக் குதித்து, சிபியை கட்டிப்பிடித்து நன்றி கூறினார். முன்னதாக சிபிக்கும் அக்ஷராவுக்கும் பால் பண்ணை டாஸ்க், பொம்மை டாஸ் மற்றும் பள்ளி கால டாஸ் என எனைத்து டாஸ்க்கிலும் முட்டிக்கொண்டதை பிக்பாஸ் வீடும் சரி, போட்டியாளர்களும் சரி, பார்வையாளர்களும் சரி மறந்திருக்க முடியாது. அதன் பின்னர் அக்ஷரா, தானே சென்று சிபியிடம் அதை பேசி சரிசெய்துகொண்டார்.
இந்நிலையில் தான் சிபி அக்ஷராவுக்கு நாற்காலியை விட்டுத் தந்தார். ஆனால் டாஸ்கில் சிபியின் பிஹேவியர் மிகவும் முரட்டுத் தனமாக இருப்பதாக கூறி அக்ஷரா கன்ஃபெஷன் ரூமில், இந்த வார எவிக்ஷனுக்காக சிபியை நாமினேட் செய்துள்ளார். மேலும் இதற்கு சிபியின் டாஸ்க் பிஹேவியர் மட்டும்தான் காரணம் என்றும், அவருடனான சிக்கலை தான் தன் தரப்பில் இருந்து மட்டுமே தீர்த்ததாகவும், அதற்கு சிபி முயற்சிக்கவில்லை என்றும் அக்ஷரா நாமினேஷனின்போது கூறியுள்ளார்.