CHILLA CHILLA : "உள்ளுக்குள்ள 🔥, மாஸ் 😎".. துணிவு சிங்கிள் குறித்து பிரபல இளம் நடிகரின் வைரல் பதிவு!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

துணிவு படத்தின் பாடல் குறித்து பிரபல இளம் நடிகர் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.

Advertising
>
Advertising

நடிகர் அஜித் குமார் நடிப்பில் இதற்கு முன்பாக வலிமை திரைப்படம், கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதியன்று வெளியாகி இருந்தது. H. வினோத் இயக்கி இருந்த இந்த திரைபடத்தை போனி கபூர் தயாரித்திருந்தார்.

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக துணிவு திரைப்படத்தில் நடிகர் அஜித் குமார் நடிக்கிறார். நேர்கொண்ட பார்வை, வலிமை திரைப்படத்திற்கு மூன்றாவது முறையாக துணிவு திரைப்படம் மூலம் நடிகர் அஜித் குமார், இயக்குனர் H. வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் இணைகின்றனர்.

இந்த படத்தில் நடிகை மஞ்சு வாரியர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் கொக்கென் இந்த படத்திலும் நடித்து வருகிறார். பிரபல இளம் தமிழ் சினிமா நடிகர் வீராவும் இந்த படத்தில் நடிப்பதை உறுதி செய்துள்ளார்.

இந்த படத்தின் ஒளிப்பதிவை நீரவ் ஷா கவனிக்கிறார். கலை இயக்குனராக மிலன் பணிபுரிய, சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார்.

துணிவு படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. துணிவு படத்தின் ரிலீஸிற்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ள நிலையில், படத்தின் அப்டேட்டையும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

இந்த நிலையில், இளம் நடிகரான சிபி சந்திரன் துணிவு படத்தில் வரும் Chilla Chilla பாடல் குறித்து பகிர்ந்துள்ள ட்வீட், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பல மடங்கு அதிகரித்துள்ளது. இது தொடர்பான சிபி சந்திரன் ட்வீட்டில்,  "Loved #ChillaChillaSong ❤️. உள்ளுக்குள்ள 🔥. மாஸ் 😎" என குறிப்பிட்டுள்ளார். துணிவு படத்தின் பாடல் குறித்து நடிகர் சிபி சந்திரனின் ட்வீட் ரசிகர்களை வெகுவாக ஈர்த்து வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Ciby chandran tweet about chilla chilla song thunivu

People looking for online information on Ajith Kumar, Boney kapoor, Chilla Chilla, Ciby Bhuvana Chandran, Ghibran, H Vinoth will find this news story useful.