தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்று மக்களால் கொண்டாடப்படும் நடிகர் கிருஷ்ணா இன்று அதிகாலை மரணமடைந்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சியான் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார்.
Also Read | நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணா மரணம்.. நடிகை மீனாவின் உருக்கமான பதிவு.!
தெலுங்கு திரைப்பட உலகில் முன்னணி கதாநாயகர்களுள் ஒருவராக வலம் வருபவர் மகேஷ் பாபு. இவருடைய தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணா கட்டமனேனி நேற்று காலை ஹைதராபாத்தில் உள்ள கான்டினென்டல் மருத்துவமனையில் மாரடைப்பின் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அங்கே அவருக்கு CPR செய்யப்பட்ட நிலையில் இருதய, நரம்பியல் மற்றும் அவசரநிலை வல்லுநர்கள் அடங்கிய பல்துறை மருத்துவ நிபுணர் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று காலை கிருஷ்ணா மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் சியான் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில்,"கிருஷ்ணா காரு போன்ற மேன்மை பொருந்தியவருடன் பணிபுரிவது எனக்குக் கிடைத்த பெருமையாகும். அவருடைய மறைவால் துயரப்படும் கோடிக்கணக்கானவர்களில் நானும் ஒருவன். என் அன்பு நண்பருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது பிரார்த்தனைகளும் இதயப்பூர்வமான அனுதாபங்களும்" எனக்குறிப்பிட்டு மகேஷ்பாபுவை டேக் செய்திருக்கிறார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு சுசிகணேசன் இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் வெளியான படம் கந்தசாமி. இதில் கிருஷ்ணா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
80 வயதான கிருஷ்ணா, இதுவரையில் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு சினிமாவின் சூப்பர் ஸ்டாராகவும் மக்கள் இவரை கொண்டாடுகின்றனர். கிருஷ்ணா கடைசியாக 2016 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படமான ஸ்ரீ ஸ்ரீ இல் நடித்திருந்தார். கிருஷ்ணா நடிகர் மட்டும் அல்லாது வெற்றிகரமான இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்தார். திரையுலகில் இவருடைய பங்களிப்பை பாராட்டும் விதமாக 2009 ஆம் ஆண்டு பத்ம பூஷன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். நடிகர் மகேஷ்பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணாவின் மறைவு இந்திய திரையுலகையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also Read | "அவர் கத்துக்கொடுத்த பாடம்..".. மகேஷ்பாபுவின் தந்தை மறைவுக்கு இயக்குனர் SS.ராஜமௌலி உருக்கம்..!